கிராம்பு சாப்பிடுவதால் உடலில் நடக்கும் ஆரோக்கிய நன்மைகள்
ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட கிராம்பு பழங்காலத்தில் இருந்தே மசாலா பொருளாகவும், மருத்துவ குணங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மூலிகை, உலகம் முழுவதும் தற்போது காணப்படுகிறது. கிராம்புகளில் யூஜினோல், காரியோஃபிலின் மற்றும் அசிட்டைல் யூஜினோல் போன்ற பல சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி தொற்றுகளுக்கு எதிராக போராட உதவுகின்றன .
கிராம்புகளில் உள்ள ஆன்ட்டி மைக்ரோபியல் மற்றும் அழள்சி எதிர்ப்பு பண்புகள், செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. இது வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வயிறு வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. கிராம்புகளின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலி, தசைவ வலி மற்றும் பல் வலி போன்ற வலிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும்.
வாய் மற்றும் பற்களில் பாதிப்பு இருப்பவர்கள் தினசரி மூன்று கிராம்பு சாப்பிடுவதால் அவை விரைவில் குணமடையும். இது பல் துளைகள், ஈறுநோய் மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற வாய் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. கிராம்புகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், இதய நோய் அபாயம் குறைகிறது. சில ஆய்வுகளில், கிராம்பு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் என கண்டறியப்பட்டுள்ளன. இது நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும்.தினசரி 3 கிராம்பு சாப்பிடுவதால் உடலில் , பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகின்றன.
0
Leave a Reply