ஆஸ்துமா அவதியைத் தடுக்க விரைவில் சிகிச்சை பெற வேண்டும்
எந்த அளவிற்கு விரைவில் சிகிச்சை பெறுகிறார்களோ, அந்த அளவுக்கு ஆஸ்துமா விரைவில் குணமடையும்.
தூக்க மாத்திரை, அவில் போன்ற அலர்ஜி மாத்திரை, நாடித்துடிப்பை மிகுதிப்படுத்தும் மருந்து, (உ.ம். அட்டிரினிலின்), உயர் ரத்த அழுத்தத்திற்குக் கொடுக்கும் மாத்திரை (உ.ம். புரோபரனலால்) • மூச்சுத் திணறல் வரும்போது தவிர்க்க வேண்டிய மருந்துகள்
சளி இறுகாமலிருக்க நிறைய திரவ உணவினை வாய் மூலமோ, ஊசி மூலமோ உட்கொள்ள வேண்டும்.
சுயமாக மருந்து, மாத்திரை உட்கொள்வது கூடாது.
புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் விடவும்
அலர்ஜி, ஆஸ்துமாவைத் தூண்டும் உணவுப் பொருட்கள் மற்றும் சூழ்நிலைகளைத் தவிர்க்கவும்
மூச்சுத் திணறல், இருமல் (பக்கவாட்டு விலா எலும்பு வலி), காய்ச்சல் ஆகியவை தள்ளிப்போடாமல் மருத்துவரை அணுகவும்.
வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதைத் தவிர்க்கவும். உதாரணம்: பூனை, நாய், புறா, கிளி
தூசு, குப்பை, அழுகிய உணவுப்பொருட்களை உடனடியா க அப்புறப்படுத்தவும்.
படுக்கை, மெத்தை, தலையணை ஆகியவற்றில் ஆஸ்துமாவை உண்டாக்கும் பூச்சிகள் குடியேற வாய்ப்பு இருப்பதால் அவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும்
நோயாளிகள் மூச்சுத்திணறல் ஏற்படும் போது பயப் படக்கூடாது
வீட்டு உபயோக ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கத் தயங்கக்கூடாது. ஆக்சிஜன் சிலிண்டர் உபயோகப்படுத்தும் போது புகைப்பிடிக்ககூடாது, வெடித்துவிடும்.
தனிமை தவிர்க்கப்பட வேண்டும்
மன அழுத்தம் வராமல் இருக்க மருத்துவமும் பயிற்சியும் தேவை
மார்பு ,பிசியோதெரபி தேவைப்படும்போது அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் (உள்ளிருக்கும் சளியை வெளிக்கொணர)
சாப்பிட்டவுடன் படுக்கக்கூடாது.
0
Leave a Reply