உள்ளுறுப்புகளை சுத்தம் செய்யும் தாளிசபத்திரி இலைகள்.
மூக்கடைப்பு, சளி, இருமல் போன்ற சுவாச தொந்தரவுகள் இருந்தால், கற்பூரவல்லி எனப்படும் ஓமவள்ளி இலைகளை மருந்தாக பயன்படுத்துவோம் அல்லது கருந்துளசி, நொச்சி இலைகளை பயன்படுத்துவோம். அதுபோலவே, தாளிசபத்திரியும் பயன்படுகிறது.
தாளிசாதி என்றும் இதனை சொல்வார்கள்.சளி, மூக்கடைப்பு, சைனஸ், தலைவலி, நீர்க்கோவை, தலைபாரம் மட்டுமல்ல, எப்பேர்ப்பட்ட காய்ச்சலையும் கட்டுக்குள் கொண்டு வரும் தன்மை, இந்த மரத்தின் இலைகளுக்கு உண்டு. இந்த தாளிசபத்திரி மரமானது, பச்சை நிறத்தில் நீளமாக வளரக்கூடியது.. மோனோடெர்பீன்கள், பிளேவனாய்டுகள், பைஃப்ளேவனாய்டு, கிளைகோசைடுகள், பைட்ரோ ஸ்டீரால்கள், அமினோ அமிலங்கள், சபோனின்கள், டானின்கள், ஆல்கலாயிடுகள், ட்ரைடர்பெனாய்டுகள் போன்ற சத்துக்கள் இந்த மரத்தின் இலைகளில் நிறைந்துள்ளது.
முக்கியமாக, பேக்லடாக்சால் என்ற வேதிப்பொருள் இலைகளில் இருப்பதால், மருந்தாக உதவுகிறது.நுரையீரலிலுள்ள மொத்த கபமும் வெளியேறிவிடும். இந்த இலையில் கஷாயம் போல வைத்து குடிக்கலாம்.சளிக்கு மட்டுமல்ல, பயங்கர நோயான புற்றுநோயையும் இந்த இலைகள், வேதிப்பொருளாக பயன்படுகிறதாம். புற்றுக்கட்டிகளை கரைக்கும் சக்தி இதற்கு உண்டு
தாளிசபத்திரி இலைகளை காயவைத்து தூள் போல தயார் செய்து வைத்து கொண்டால், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற தொந்தரவுகளுக்கு பயன்படுத்தலாம்.வெறுமனே இந்த இலைகளை பறித்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.. அல்லது குளிக்கும் வெந்நீரிலும் பயன்படுத்தலாம்.. இதனால், தலைவலி, தலைபாரம் நீங்கிவிடும். மிளகு: தாளிசபத்திரி, மிளகு, சுக்கு, அரிசி, திப்பிலி, கற்கண்டு போன்றவற்றுடன் சேர்த்து, சூரணம் போல தயார் செய்து, கடைகளில் விற்கிறார்கள்.தாளிசாதி வடகம், தாளிசாதி சூரணம் என்ற பெயரில் இது விற்பனை செய்யப்படுகிறது.கட்டுக்கடங்காத சளி, இருமலுக்கு இந்த பவுடரை பயன்படுத்துவார்கள்.. எப்பேர்ப்பட்ட ஜூரத்தையும் இது போக்கிவிடும். சுவாச உறுப்புகள் பலப்படுத்தவும், இந்த சூரணம் பேருதவி புரிகிறது.. சிலர் இந்த பொடியில் பற்களை தேய்க்க பயன்படுத்துவார்கள். இதனால் பல்வலியும் சரியாகி, ஈறுகள் பலம் பெறும்.
மூச்சு திணறல் பிரச்சனை இருப்பவர்கள், இந்த தாளிசாதி சூரணம் எடுத்துகொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும். அதேபோல, உடல் சோர்வு உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், இந்த சூரணத்தை சாப்பிட்டால், பலமும், சுறுசுறுப்பும் கிடைக்கும். காது பகுதியில் ஏற்படும் இரைச்சல் வந்தாலோ அல்லது மூக்கிலிருந்து நீர் வடிந்தாலோ, அதற்கும் இந்த சூரணம் உதவுகிறது.. வயிறு எரிச்சல், பசி இல்லாத உணர்வு, அஜீரணம், வயிற்றுப்புண்களை இந்த சூரணம் சரிசெய்கிறது.மஞ்சள் காமாலை பிரச்சனை உள்ளவர்களுக்கும், இந்த தாளசபத்திரி சூரணம் கை கொடுக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை இந்த மூலிகை சூரணம் தடுத்து நிறுத்தும். ஆனாலும், சித்த மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று இதனை மருந்தாக எடுத்து கொள்ளலாம்.
0
Leave a Reply