செம்பருத்தி பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூக்க ....
நாம் விரும்பி வளர்க்கும் பல வகையான பூச்செடிகளில் செம்பருத்தி பூச்செடியும் ஒன்று செம்பருத்தி பூவினால் நமக்கு பலவகையான நன்மைகள் கிடைக்கிறது. அப்படி நாம் மிகவும் விரும்பி வளர்க்கும் செம்பருத்தி பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூக்கவில்லை என்றால் நமது மனம் மிகவும் கவலைப்படும். உங்க வீட்டில் இருக்கும் செம்பருத்தி பூச்செடியில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க உதவும் ஒரு TIPS.
1. சாதம் வடித்த தண்ணீர் - 1 கப்
2 வெந்தயம் - 50 கிராம்
3 வேர்க்கடலை - 50 கிராம்
4 தண்ணீர் - 10 லிட்டர்
மூடிபோட்ட பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:முதலில் நாம் எடுத்து வைத்துள்ள1 கப் சாதம் வடித்த தண்ணீரை1 மூடிபோட்ட பாத்திரத்தில் ஊற்றி கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள50 கிராம் வெந்தயம் மற்றும்50 கிராம் வேர்க்கடலை ஆகியவற்றை சேர்த்து இரண்டு முதல் மூன்று நாட்கள் அப்படியே ஊறவிடுங்கள்.மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:இரண்டு முதல் மூன்று நாட்கள் கழித்து நாம் ஊறவைத்திருந்த1 கப் சாதம் வடித்த தண்ணீரை,50 கிராம் வெந்தயம் மற்றும்50 கிராம் வேர்க்கடலை ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள்.பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் தயாரித்து வைத்துள்ள பசையை சேர்த்து அதனுடன்10 லிட்டர் தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள்.பிறகு இதில் இருந்து1 கப் மட்டும் எடுத்து உங்கள் வீட்டில் உள்ள செம்பருத்தி பூச்செடியின் வேர்களில் ஊற்றி கொள்ளுங்கள். இதனை வாரத்திற்கு இரு முறை என்று தொடர்ந்து ஊற்றி வருவதன் மூலம் உங்கள் செம்பருத்தி பூச்செடி கொத்து கொத்தாக பூக்கள் பூக்க ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.அதேபோல் இதனை அனைத்து பூச்செடிகளும் மற்றும் செடிகளுக்கும் ஊற்றலாம்.
0
Leave a Reply