25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


மாற்றுத்திறனாளிகளுக்கு  தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா.

திருவில்லிபுத்தூர் சைமா அறக்கட்டளை, பெங்களூரூவை சார்ந்த எனேபில் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி ஆகியவை இணைந்து ஒன்றியம் கோபாலபுரம் கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் வைத்து  மாற்றுத் திறனாளிகளை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான 10 நாட்கள் பயிற்சியை அளித்தது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோருக்கு தேவையான திறன்கள், பண்புகள் மற்றும் தொழில் தேர்வு செய்வதற்கான வழிமுறைகள், விலை நிர்ணயம் செய்தல், சந்தை படுத்துதல், மாற்றுத் திறனாளிகள் சந்திக்கும் தடைகள் மற்றும் சவால்களை, எதிர்கொள்ளும் விதம், தன்னம்பிக்கை வளர்த்தல், நிதி மேலாண்மை போன்ற பல கருத்துகள் வழங்கப்பட்டது. 

நிறைவு விழாவுக்கு சைமா அறக்கட்டளையில் இயக்குனர் ராஜகோபால் அவர்கள் தலைமை வகித்தார். கள ஒருங்கிணைப்பாளர் சித்ரா ஒருங்கிணைப்பு செய்தார்.   இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் சங்கரலிங்கம் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற 35 மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கினார்.  

மேலும் இந்த நிகழ்வில் பயிற்நுனர்கள் சுவேதா, எனேபில் இந்தியா திட்ட அலுவலர் சுப்புராஜ், வத்திராயிருப்பு லயன்ஸ் சங்கம் சார்பில் நிகழ்வில் மண்டலத் தலைவர் சுப்பையா , மாவட்ட தலைவர் ஆரியன் மதுரம், லயன்ஸ் செயலாளர் அறிவொளி முருகன் மற்றும் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தர்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News