காராச்சேவு செய்ய....
காராச்சேவு செய்யும் போது, மாவை சற்றுகெட்டியாகப் பிசைந்து கொள்வது அவசியம்.
ரிப்பன் பக்கோடாவிற்கு, இரண்டு கப் கடலைமாவுக்கு, ஒரு கப் அரிசி மாவு சேர்த்து செய்வது சரியான விகிதம்.ரிப்பன் பக்கோடாவை நன்றாக சிவக்க வேகவைத்து எடுப்பது நல்லது.
மகிழம்பூ, தேன்குழல் போன்ற பலகாரங்களுக்கு உபயோகிக்கும் பாசிப்பருப்பு மற்றும் கடலைப் பருப்பை வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுத்து, நைசாக அரைத்து, பின்னர் சலித்து வைத்துக் கொள்ளவும்.
எண்ணெயில் பொரித்து எடுத்தவுடன் பலகாரங்களில் உள்ள எண்ணெயை வடிக்க, வடிகட்டி அல்லது டிஷ்யூ பேப்பர்கள் பயன்படுத்தலாம்.
எண்ணெயுடன் சிறிதளவு நெய் சேர்த்து பலகாரங்களை பொரித்தெடுத்தால் வாசனையும், சுவையும் கூடும்.
0
Leave a Reply