25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


விவசாய விலை நிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தும் வனவிலங்குகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விவசாய விலை நிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தும் வனவிலங்குகள்

 இராஜபாளையம்,ஸ்ரீவில்லிபுத்தூர்,வத்திராயிருப்பு,, சேத்தூர் ,தேவதானம், மேற்குதொடர்ச்சிமலைவனப்பகுதிகளில்  யானை, காட்டுப்பன்றி, மிளா, காட்டு எருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய விலை நிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்துகின்றன.

வனத்தை ஒட்டி உள்ள நிலங்களில் தென்னை, மா, பலா, வாழை  உள்ளிட்டவைகளை சமீப காலமாக காட்டு யானைகள் கூட்டமாக நுழைந்து 50 ஆண்டுகள் பலன் தந்த பலா மரங்கள் முதல் தென்னை மரங்களை உடைத்தும் குருத்துகளை பிடுங்கியும் சேதப்படுத்தி வருகின்றன. இது குறித்து அரசுக்கு இழப்பீடு வழங்க விண்ணப்பித்தால் அதிகாரிகள் காலதாமதம் செய்கின்றனர்..

கூட்டமாக சேதப்படுத்தும் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டவும் காட்டுப்பன்றிகள், மான்களை கட்டுப்படுத்தி விளை நிலங்களை பாதுகாக்க ஒவ்வொரு குறைதீர் கூட்டத்திலும் விவசாயிகள் கலெக்டரிடம் முறையிடுகின்றனர். இவற்றுக்கு தீர்வாக வேளாண் துறை மூலம் ,மானிய விலையில் வேலி அமைக்க ஒதுக்கீடு செய்வதுடன், வனவிலங்குகள் சேதப்படுத்தும் பயிர்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்கி வேலி அமைக்க ஒப்புதல் வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News