25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்  இராஜபாளையம் மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் இராஜபாளையம் மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் .

மாசி மாதம் 09ம் தேதி முதல் மாசி மாதம் 18ம் தேதி வரை (21.02.2026 02.03.2026)

இராஜபாளையம் நகரில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்னர் எனது தந்தையாரின் தாத்தா ஸ்ரீ பி.ஏ. சின்னையராஜா அவர்களால் மணல் மேட்டில் கேட்ட மணி சப்தத்தைக் கொண்டு தோண்டி எடுக்கும் போது கிடைத்த திருக்கோவிலாகும். புராதனமும், பாரம்பரியமும் மிக்க இத்திருக்கோவிலை எனது தாத்தா பெருந்தகை ஸ்ரீ பி.ஏ.சி. ராமசாமிராஜா அவர்கள் எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த தெய்வ பொக்கிஷமாகக் கருதி பரம்பரை அறங்காவலராக இருந்து பல திருப்பணிகள் செய்து மகிழ்ந்தார்கள். அவரைத் தொடர்ந்து எனது தகப்பனார் "குருபக்தமணி" ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா அவர்கள் 1977,2001 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இராஜகோபுரமும், கொடிமரமும், அருள்மிகு ஐயப்பன் திருகோவிலும் ஸ்தாபித்து ஸ்வாமீ, அம்பாளுக்கு தங்ககவசமும் நூதன வசந்த மண்டபம் போன்ற பல்வேறு திருப்பணிகள் செய்து மூன்று முறை கும்பாபிஷேகம் செய்து மகிழ்ந்தார்கள். 

மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் ,இத்திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற உள்ளது. ஆஸ்திக மஹாஜனங்கள் அனைவரும் இத்திருவிழாவில் கலந்து கொண்டு ஸ்ரீ மீனாக்ஷி ஸமேத சுந்தரேச்வரர் திருவருளுக்கு பாத்திரர்களாகும்படி கேட்டுக்கொள்கிறோம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News