அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம்: இன்னும் முடிவு இல்லை.
அமெரிக்கா முன்மொழிந்துள்ள அமைதி ஒப்பந்தம் குறித்து ஈரான் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜூன் 19-ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தாலும், கடல்சார் முற்றுகை நீக்கம், முடக்கப்பட்ட நிதி விடுவிப்பு மற்றும் யுரேனியம் செறிவூட்டல் உரிமை உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை என ஈரான் விளக்கம் அளித்துள்ளது.
எனவே, முழுமையான ஆய்வுக்குப் பிறகே அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
0
Leave a Reply