25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


நல்லெண்ணெய், வெண்ணெய் எது நல்லது ?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நல்லெண்ணெய், வெண்ணெய் எது நல்லது ?

நாம் சமையலுக்கு எண்ணெயைத் தான் பயன்படுத்துகிறோம். நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவையே பிரதானமாக இருக்கின்றன. உலகின் பிற நாடுகளில் எண்ணெயை விட அதிகமாக வெண்ணெயே சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. சொல்லப்போனால் வெண்ணெய் தான் பல நேரங்களில் உணவின் சுவையைக் கூட்டுகிறது. ஆனால் இது ஆரோக்கியமானதா என்ற கேள்வி நீண்டகாலமாக இருந்து வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வர்ட் பல்கலைஉள்ளிட்ட சர்வதேச பல் கலைகள் இணைந்து ஒரு முக்கியமான ஆய்வை  மேற்கொண்டன.2,21,054 பேர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.அவர்களுடைய 30 ஆண்டு மருத்துவ அறிக்கை பரிசோ திக்கப்பட்டது. அவர்கள் சமையலுக்குப் பயன்படுத்தியது வெண்ணெயா , எண்ணெயா என்பதும் கேட்டு அறியப்பட்டது.

தொடர்ந்து ஆராய்ச்சி செய்ததில் யார் யாரெல்லாம் ஆலிவ், சோயா பீன்ஸ் முதலியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் வகைகளைப் பயன்படுத்தினார்களோ அவர்களுக்கெல்லாம் இதயநோய் ஏற்படுகின்ற வாய்ப்பு 16 சதவீதம் ணந்து குறைவாக இருப்பது தெரிய வந்தது.அதேபோல யாரெல்லாம் வெண்ணெயைப் பயன் படுத்திச் சமைத்தார்களோ, அவர்களுக்கெல்லாம் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு  12 சதவீதம் அதிகமாக  இருப்பது தெரிய வந்தது.எனவே ஒரு நாளில் நாம் பயன்படுத்தும் வெண்ணெயை வெறும் 10 கிராம் மட்டும் குறைத்துக் கொண்டு, அதற்குப் பதி லாக அதே 10 கிராம் அளவு தாவர எண்ணெய்களைப் பயன்படுத்தினால் பலவிதநோய்களிலிருந்து விடுபடலாம். இதனால் நமது ஆயுள் 17 சதவீதம் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.

இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் தாவர எண்ணெய்களில் நிறைவுறாக் கொழுப்பு (Unsaturated fat) உள்ளது. வெண்ணெயில் நிறைவுற்றகொழுப்புகள் (Saturated fats) இருக்கிறது. இது ரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொலஸ்ட் ரால் அளவை அதிகரிக்கும். இதுவே இதய நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது. எனவே, தாவர எண்ணெய் வகைகளே சிறந்தவை என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News