சாட் ஜிபிடி (Chat GPT) மூலம் AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI!
தொழில்நுட்ப வளர்ச்சியில் தற்போது இணைய தேடுபொறி நிறுவனங்களிடையே AIதொழில்நுட்ப யுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் அதில் அடுத்த அடியை எடுத்து வைக்க தயாராகியுள்ளது ஓபன் AI நிறுவனம்.சாட் ஜிபிடி (Chat GPT) மூலம் உலகில்AI தொழில்நுட்பத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதுOpenAI. சாட் ஜிபிடி வருகையை தொடர்ந்து கூகிளும்GEMINI,AI உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்திய நிலையில் சீனாவின்DeepSeek,GWEN,AI என பல AI கள் அறிமுகமாகியுள்ளன. இதனால் ஆட்டோமேஷன் நடவடிக்கைகளும் பல துறைகளில் வேகமாக அதிகரித்து வருகிறது.
சாட்ஜிபிடியால் ஏற்கனவே கூகிள் ப்ரவுசர் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கூகிள் தேடுபொறியை விட பலரும் சாட் ஜிபிடியில் வெறும் வாய்ஸ் கமெண்டில் கேட்டாலே அது தகவல்களை அள்ளி வழங்குவதால் அதற்கு மவுசு கூடியுள்ளது. மேலும் AI திரட்டி தரும் தகவல்களில் ஏற்படும் தகவல் பிழையை ப்ரவுசர்கள் சுட்டிக்காட்டும் நிலையில் Deep Search மூலமாக தளங்களின் தரவுகளையும் AI க்கள் வழங்கத் தொடங்கிவிட்டன.
இந்நிலையில்தான் அடுத்த கட்டமாகAI தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய வெப் ப்ரவுசரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது ஓபன் AI நிறுவனம். அதற்கான பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் சில வாரங்களில் இந்த புதிய AI ப்ரவுசர் பயன்பாட்டிற்கு வரும் என பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் கூகிள் ப்ரவுசர் பெரும் பின்னடைவை சந்திக்கக் கூடும் என கூறப்படுகிறது.
இதனால் கூகிள் சூதானமாக செயல்பட்டு தனது ப்ரவுசருடனே ஜெமினியை Integrate செய்துள்ளது. ப்ரவுசரிலேயே DiveDeeperinAI,Mode மூலமாக ஜெமினிக்கு மாறி ப்ரவுசர் போல அல்லாமல் AI எக்ஸ்பீரியன்ஸில் தகவல்களை பெற முடியும். ஆனால் அதையும் ஓபன் AI சிந்தித்தே பல புதிய அம்சங்களை தனது ப்ரவுசரில் அமைத்திருக்கும் என்கிறார்கள் AI தொழில்நுட்ப ஆர்வலர்கள்.
0
Leave a Reply