.ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் சம்பளம், வீடு முதல் மின்சாரம் வரை வேறு சலுகைகள் என்ன எல்லாம் கிடைக்கும்
நமது நாட்டில் ஐஏஎஸ்மற்றும் ஐபிஎஸ்உள்ளிட்ட உயர்பதவிகளில் இருப்போருக்குச் சம்பளம் எவ்வளவு கிடைக்கும்என்ற கேள்விபலருக்கும் இருக்கும்.. நமது நாட்டின்யுபிஎஸ்சி தேர்வுமுடிவுகள் சமீபத்தில்வெளியானது. இதில்மொத்தம்1016 பேர்தேர்ச்சி பெற்றுள்ளநிலையில், அதில்ஆதித்ய ஸ்ரீவஸ்தவாஎன்பவர் முதல்இடத்தை பிடித்துள்ளார்.அவர்களில்664 பேர்ஆண்கள் மற்றும்352 பெண்கள் ஆவர்.நம்மில் பலருக்கும்இதுபோன்ற ஐஏஎஸ்மற்றும் ஐபிஎஸ்அதிகாரிகளுக்கு எந்தளவுக்குஊதியம் இருக்கும்என்ற சந்தேகம்இருக்கும். ஐஏஎஸ்உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான ஊதியகட்டமைப்பை7ஆவதுமத்திய ஊதியக்குழு மறுசீரமைத்துள்ளது.இதில் பே கிரேட் முறைக்குப்பதிலாக பே லெவல்கள் முறைமுன்மொழியப்பட்டுள்ளன. சீனியாரிட்டிமற்றும் ஒருவர்இருக்கும் பதவியின்அடிப்படையில் ஊதியத்தில்மாற்றங்கள் வரும்.. அடிப்படையில் ஒருஐஏஎஸ் அதிகாரியின்சம்பளம் மாதம்ரூ.56,100ஆகஉள்ளது. சர்வீஸ்அதிகரிக்கும் போதுஅவர்களின் உயர்பதவிகளுக்குச் செல்வார்கள்.அப்போது அவர்களின்அடிப்படை ஊதியம், அலவுன்ஸ் அதிகரிக்கும்..ஐஏஎஸ் அதிகாரிஒருவரால் அதிகபட்சம்இந்திய கேபினட்செயலாளர் பொறுப்புவரை செல்லமுடியும். அப்போதுஅவர்களுக்கு ரூ.2.5 லட்சம் வரைசம்பளம் கிடைக்கும்.
ஐஏஎஸ்அதிகாரிகள் சப்டிவிஷனல் மாஜிஸ்திரேட்உள்ளிட்ட லெவல்10 பதவிகளில் இருந்தேதங்கள் கேரியரைதொடங்குவார்கள். அவர்கள்மெல்லப் பதவிஉயர்வைப் பெற்றுஅதிகபட்சம் லெவல்18இல் இருக்கும்கேபினட் செயலர்பதவிக்கு வரலாம். லெவல்10இல்இருக்கும் ஒருஐஏஎஸ் அதிகாரியின்அடிப்படை ஊதியம்மாதம் ரூ.56,100இல் தொடங்குகிறது.பொதுவாக ஒருவர்தங்கள் கேரியரின்முதல் நான்குவருடங்கள் இந்தபே லெவலில்இருப்பார்கள். அதற்குஅடுத்துக் கூடுதல்மாவட்ட மாஜிஸ்திரேட்உள்ளிட்ட லெவல்11,,13 பதவிகளில் இருப்போருக்குஅடிப்படை ஊதியம்ரூ.67,700இல்தொடங்கும்.. இதில்அவர்கள் அதிகபட்சம்1,18,500 ரூபாய் வரைஊதியம் கிடைக்கும். அடுத்த கட்டமாகக்கூடுதல் மாவட்டமாஜிஸ்திரேட் உள்ளிட்டபதவிகளைக் கொண்டலெவல்14,,15இல்இருப்போருக்கு அடிப்படைஊதியம் ரூ.1,44,200இல் இருந்துதொடங்குகிறது. இதில்முதன்மைச் செயலாளர்மற்றும் கூடுதல்செயலாளர் போன்றலெவல்15இல்இருப்போருக்கு ரூ.1,82,200 அடிப்படை ஊதியமாகக்கிடைக்கும்.
அடுத்துக் கூடுதல் தலைமைச்செயலாளர் உள்ளிட்டபதவிகளைக் கொண்டலெவல்16இல்அடிப்படை ஊதியமாகரூ.2,05,400 கிடைக்கிறது.தலைமைச் செயலாளர்உள்ளிட்ட உச்சபட்சபதவிகளைக் கொண்டலெவல்17 மற்றும்18இல் ஒருவருக்குரூ.2,25,000 மற்றும்ரூ.2,50,000 வரைஊதியமாகக் கிடைக்கும்.ஒரு ஐஏஎஸ்அதிகாரிக்கு வீட்டில்காவலர்களும்,2 தனிப்பட்டகாவலர்கள் என மொத்தம்5 பேர்பாதுகாப்பிற்கு வழங்கப்படுவார்கள்..அவர்களின் உயிருக்குஅச்சுறுத்தல் இருந்தால்ஸ்பெஷல் டாஸ்க்போர்ஸ் பணிஅமர்த்தப்படுவார்கள். மேலும்அவர்களின் பதவி, ஊதியம் மற்றும்சீனியாரிட்டி அடிப்படையில்பங்களாக்கள் ஒதுக்கப்படும்.அதில் சிலகுறிப்பிட்ட ஊழியர்களையும்பணி அமர்த்திக்கொள்ளலாம்.ஐஏஎஸ் அதிகாரிஅதிகாரப்பூர்வ பயணமாகச்சென்றாலும் சரிதனிப்பட்ட பயணமாகச்சென்றாலும் சரிஅவர்கள் வெளியூர்களில்அரசு குடியிருப்புகள் அல்லது விருந்தினர் மாளிகைகளைஇலவசமாகப் பயன்படுத்தலாம்.அதிகாரப்பூர்வ இல்லத்தில்அவர்கள் மின்சாரகட்டணத்தைச் செலுத்தத்தேவையில்லை. மேலும், அதிகாரப்பூர்வ பணிகளுக்குப்பயன்படுத்த கார்களும்வழங்கப்படும்.
0
Leave a Reply