ராகி புட்டு.
ஆரோக்கியமான காலை உணவு
தேவையான பொருட்கள்
ராகி மாவு -1 கப்
துருவிய தேங்காய் -2 கப்
தண்ணீர் - தேவையான அளவு
வெல்லம் (துருவியது) ¼முதல் ½ கப் (விருப்பத்திற்கு)
உப்பு -1/4 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் -1/4 டீஸ்பூன் (விருப்பத்திற்கு)
செய்முறை
ராகி மாவில் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து, மாவ் இதிரியாக இருக்கும் பதத்திற்கு
பிசையவும். (கையில் பிடித்தால் உருண்டையாக வர வேண்டும்;
தொட்டால் மீண்டும் உதிர வேண்டும்.)
இந்த மாவை 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
புட்டு மேக்கர் அல்லது இட்லி பாத்திரத்தில் முதலில் சிறிது தேங்காய்,
அதன் மேல் ராகி மாவு என அடுக்கி நிரப்பவும்.
8-10 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும். வெந்ததும் எடுத்து,
வெல்லம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்.
குறிப்புகள்
குழந்தைகளுக்கு நெய் சேர்த்து கொடுத்தால் சுவையாக இருக்கும்.
வாழைப்பழம் சேர்த்து கலந்து சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.
கார சுவை விரும்பினால் தேங்காய் சட்னி அல்லது காய்கறி
குருமாவுடன் பரிமாறலாம்.
0
Leave a Reply