ஆசிய கோப்பை பைனலுக்கு இந்திய பெண்கள் அணி.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலுக்கு இந்திய பெண்கள் அணி 10வது முறையாக முன்னேறியது. அரையிறுதியில் வங்கதேசத்தை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 10வது சீசன் நடக்கிறது. நேற்று துபாயில் நடந்த முதல் அரையிறுதியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வங்கதேச அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 149/5 ரன்கள் எடுத்தது. சவாலான இலக்கை விரட்டிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 109/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
0
Leave a Reply