இந்திய தடகள சீரிஸ்: விஷால் முதலிடம்.
டில்லியில், இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில் இந்திய தடகள சீரிஸ் பைனல் நடந்தது.
ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் விஷால் 45.36 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை கைப்பற்றினார். பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் மகாராஷ்டிராவின் ஐஸ்வர்யா 52.51 வினாடிகளில் முதலிடம் பிடித்தார்.
பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் அபினயா 11.31 வினாடிகளிலும், கிரிதாரணி 11.35 வினாடிகளிலும் ஓடி முறையே 2வது, 3வது இடங்களைப் பிடித்தனர். மகாராஷ்டிராவின் ஹரிதா 11.22 வினாடிகளில் முதலிடத்தை கைப்பற்றினார்.
ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசா வீரர் அனிமேஷ் குஜுர் 10.21 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை தட்டிச் சென்றார்.
பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் கவுதமி 2 நிமிடம், 05.63 வினாடிகளில் ஓடி 3வது இடம் பிடித்தார்.
பெண்களுக்கான வட்டு எறிதலில் ஹரியானாவின் சீமா 56.52 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். பீதா 54.82 மீட்டர், கானி 54.16 மீட்டர் தூரம் எறிந்து முறையே 2வது, 3வது இடங்களைப் பிடித்தனர்.
ஆண்களுக்கான குண்டு எறிதலில் பஞ்சாப் வீரர் தஜிந்தர்பால் சிங் டூர் 20.64 மீட்டர் தூரம் எறிந்து முதலிடத்தை கைப்பற்றினார்.
0
Leave a Reply