சிங்கப்பூரில் செப். 15-ல் சைரன் ஒலி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை.
சிங்கப்பூர் முழுவதும் உள்ள ‘பப்ளிக் வார்னிங் சிஸ்டம்’ செப்டம்பர் 15-ம் தேதி மாலை 6.20 மணிக்கு சோதனைக்காக ஒலிக்க உள்ளது.
அப்போது ‘Important Message’ என்ற சிக்னல் ஒலிக்கும். அதே நேரத்தில், SGSecure செயலியின் அறிவிப்புகளை இயக்கி வைத்துள்ள செல்போன்களுக்கும் எச்சரிக்கை தகவல் வரும். Singtel நெட்வொர்க் பயன்படுத்துவோருக்கு SG Alert அறிவிப்பும் கிடைக்கும்.
இது உண்மையான அவசரநிலை எச்சரிக்கை அல்ல. சைரன் மற்றும் எச்சரிக்கை அமைப்புகள் சரியாக செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதற்காக நடத்தப்படும் வழக்கமான சோதனை ஆகும். இந்த சிக்னல் பொதுவாக ஆண்டுதோறும் பிப்ரவரி 15 மற்றும் செப்டம்பர் 15 ஆகிய தேதிகளில் ஒலிக்கப்படுகிறது.
0
Leave a Reply