தைரோடாக்சிகோஸிஸ்
இந்த நோய்க்கு தைரோடாக்சிகோஸிஸ் "என்று பெயர். தைராக்சின் எதனால் மிகுதியாகச் சுரக்கிறது என்பதற்குச் சரியான காரணம் தெரியவில்லை. இந்நோய் உள்ளவர்களுக்குதைராய்டு சுரப்பி (கழுத்தின் முன்பகுதி) சற்று வீங்கி இருக்கும் அல்லது அச்சுரப்பியில் பல கட்டிகள் இருக்கலாம்.
இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் மிகவும் மெலிந்து இருக்கும். பசி அதிகமாக இருக்கும். ஆனால் உடல் மட்டும் இளைத்துக்கொண்டே போகும். அடிக்கடி வயிற்றுப் போக்கும் ஏற்படும். எப்பொழுதும் ஒருவிதப் பதற்றத்துடனே இருப்பார்கள். அதிகமாகப் பேசுவார்கள். கண்கள் இரண்டும் வெளியே தள்ளியதுபோல் பெரிதாகக் காணப்படும். ஒரு சிலருக்கு மட்டும் தைராய்டு சுரப்பி வீங்கி இருக்கும்.
கைகளில் நடுக்கம் அதிகம் இருக்கும். உடலில் வெப்பம் சற்று மிகுதியாக இருக்கும். இவர்களால் கோடைகால வெப்பத்தைத் தாங்க முடியாது.உடல் அடிக்கடி வியர்த்துக் கொட்டும்.
முதியோர்களுக்கு நாடித்துடிப்பு அதிகரித்தல் அல்லது ஒரே சீராக இல்லாத நிலை (irregular heart beat), இதயம் வலிமை இழத்தல் மற்றும் காரணமில்லாமல் எடை குறைதல் போன்ற தொல்லைகள் இருந்தால் அவருக்கு தைராய்டு அதிகமாகச் சுரக்கும் நோயிருப்பதாகக் கருதி, அதை உறுதிசெய்யப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.
இந்நோயை ரத்தப் பரிசோதனை மூலமும், ஸ்கேன் டெஸ்ட் மூலமும் எளிதில் கண்டறிய முடியும்
0
Leave a Reply