ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை 19-0 என வீழ்த்திய இந்தியா.
சீனாவில் பெண்களுக்கான (20 வயதுக்குட்பட்டோர்) ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் 10வது சீசன் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
இதில் அபாரமாக விளையாடிய இந்திய அணி, ஆட்டநேர முடிவில் 19-0 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது.
இந்திய அணியில் பூஜா மாலிக் ‘ஹாட்ரிக்’ கோல்கள் (27, 49, 51வது நிமிடங்கள்) அடித்தார். ரோஷ்னி (9, 60+), சனிகா மானே (13, 23), மது சிதரர் (16, 39), சுப்ரியா (40, 54) ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்தனர்.
மேலும், பூஜா (7), தனுஸ்ரீ (11), சுக்வீர் கவுர் (13), கீதா (18), தனுஜா (25), பூர்ணிமா யாதவ் (33), கிருஷ்ணா சர்மா (48), பினிமா (55) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
அரையிறுதியில் (செப். 12) இந்தியா - தென் கொரியா அணிகளும், சீனா - ஜப்பான் அணிகளும் மோதவுள்ளன.
0
Leave a Reply