400 மீட்டர் பைனலில் தங்கம் வென்ற மெக்லாக்கின்
ஒலிம்பிக் தடகளத்தில் 400 மீட்டர் தடை ஓட்டத்தின் பைனல் நடந்தது. இதில் அசத்திய அமெரிக்காவின் மெக்லாக்லின் லாவ் ரோன் 50.37 வினாடி நேரத்தில் வந்து, புதிய உலக சாதனை படைத்து தங்கம் வென்றார். இம்மகிழ்ச்சியில் மெக்லாக்லின்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஒட்டத்தின் பைனல் நடந்தது. இதில் போட்ஸ் வானா வீரர் லெட்சில் டெபோகோ (19.46 வினாடி) தங்கம் வென்றார் .அமெரிக்காவின் கென்னத் பெத்நாரெக் (19.82 வினாடி )முறையே வெள்ளி, வெண்கலம், கைப்பற்றினர். பைனலில் (200 மீட்டர் ஒட்டம்) இலக்கை அடைந்த பின் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் மைதானத்தில் அப்படியே சரிந்தார். மூச்சு திணறிய இவருக்கு உடனடியாக மருத்துவ முதலுதவி அளிக்கப்பட்டது. பின் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்டார். சமீபத்தில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற இவருக்கு இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. தனிமைப்படுத்தப்பட்ட இவர் மாஸ்க் அணிந்திருந்தார். விதிமுறைப்படி 200 மீட்டர் ஒட்டத்தில் பங்கேற்று வெண்கலம் வென்றார்.
பிரான்ஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஹெப்டத்லான் போட்டி நடக்கிறது. 100 மீட்டர் தடை ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீட்டர் ஒட்டம் என மொத்தம் 7 போட்டி கொண்டது. ஒட்டு மொத்த போட்டிகள் முடிவில் அதிக புள்ளிகள் பெறும் டாப் 3 வீராங்கனைகளுக்கு பதக்கம் கிடைக்கும்.
முதல் 5 போட்டி முடிவில் உலக சாம்பியன் பிரிட்டனின் கேத்தரினா, முதலிடத்தில் இருந்தார். அடுத்து நடந்த ஈட்டி எறிதலில் இவர் 45.49 மீட்டர் தூரம் மட்டும் எறிய 11 வது இடம் தான் கிடைத்தது. இதையடுத்து ஒட்டுமொத்தமாக 5803 புள்ளி எடுத்த கேத்தரினா, இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.பெல்ஜியத்தின் நவிசாட்டோவ் தியம், ஈட்டி எறிதலில் முதலிடம் 54.04 மீட்டர் பெற்றார். இவர் மொத்தம் (5924) புள்ளி எடுத்து முதலிடத்துக்கு முன்னேறினர். மூன்றாவது இடத்தில் சுவிட்சர்லாந்தின் அன்னிக் (5694 )உள்ளார்.இன்று கடைசி போட்டியாக 800 மீட்டர் ஒட்டம் நடக்கிறது. இதில் சாதித்தால் கேத்தரீனா, முதலிடம் பெற்று தங்கம் வெல்லலாம்.
0
Leave a Reply