25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jun 07, 2024

அருப்புக்கோட்டை நகரில் வார்டு ‘E” பிளாக் 5 உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள நகர நிலஅளவை புலங்களுக்கு நகர நிலவரித்திட்டத்தின் கீழ் வருவாய் பின்தொடர்பணி மேற்கொள்ளும் பணி

நமது தமிழ்நாடு அரசானது பொதுமக்களின் நலன் கருதி பொது மக்கள் தங்களது நில ஆவணங்களை எளிதில் எங்கிருந்தும் உடனடியாக பெற்றுக்கொள்ள ஏதுவாக ஆன்லைன் பட்டா திட்டம் ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.         தற்போது நமது அருப்புக்கோட்டை நகரில் நகர நில அளவைக்குட்பட்ட வார்டு ‘E” பிளாக் 5 உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள நகர நிலஅளவை புலங்களுக்கு நகர நிலவரித்திட்டத்தின் கீழ் வருவாய் பின்தொடர்பணி மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது.          பொதுமக்கள் தங்கள் கிரைய ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட வீட்டு மனைகளுக்கு கூட்டுப்பட்டாவில் இருந்து தனிப்பட்டா பெறவும், பாகவிஸ்தி பத்திரங்கள் அடிப்படையில் தனிப்பட்டா பெறவும், கிரையம் பெற்றது முதற்கொண்டு நாளது தேதி வரை பட்டாமாற்றம் செய்யாமல் இருப்பின், பட்டா பெறவும், தங்களிடம் உள்ள பதிவு செய்யப்பட்ட பத்திர ஆவணங்களின் நகல்களுடன் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.தேவைப்படும் ஆவணங்கள்:1. கிரைய ஆவணம் மற்றும் மூல ஆவணத்தின் நகல்2. வில்லங்கச்சான்று (EC)3. ஆதார் அட்டை நகல்4. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்5. இறப்பு மற்றும் வாரிசு சான்று (இறந்தவரின் பெயரில் பட்டா இருக்கும் நேர்வுகளில்)

Jun 07, 2024

தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் (SITRA) மூலமாக ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

இந்திய பொருளாதாரத்தில் ஜவுளித்தொழில் ஒரு உன்னதமான இடத்தினை பிடித்துள்ளது. விவசாயத்திற்கு அடுத்த படியாக கிராமப்புற மக்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பினை வழங்குவதில் ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானதாகும்.தமிழ்நாட்டின் ஜவுளித்துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக தமிழ்நாடு அரசு துணிநூல் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் ((SITRA)  மூலமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு (ஆண்/பெண்) ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேற்படி பயிற்சியினை பெற விரும்புபவர்கள்  https://tntextiles.tn.gov.in/jobs/  என்ற இணையதள முகவரியில் தங்களது விபரங்களை பதிவு செய்து பயன்பெற வேண்டுமாறு தெரிவிக்கப்படுகிறது.     மேலும் துணிநூல் துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்திவரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள், உற்பத்தி கூட கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும். அதிகளவில் அன்னியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.எனவே, சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை விருதுநகர் மாவட்டத்தில் பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் அனைத்து தொழில்முனைவோரும் முன்வர வேண்டும்.மேலும், இது குறித்த விபரங்களுக்கு, துணை இயக்குநர், மண்டல துணிநூல் துணை இயக்குநர் அலுவலகம், 39, விஸ்வநாதபுரம் மெயின் ரோடு, மதுரை- 625- 014,  மின்னஞ்சல் முகவரி -ddtextilesmdu@gmail.com.  தொலைபேசி எண். 0452-2530020, 96595 32005. என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 06, 2024

உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு,  (05.06.2024) மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கி நடைப்பயண விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து,  மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.தமிழ்நாடு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் பசுமைத் தமிழ்நாடு இயக்கம்  மூலம் காடு மற்றும் மரங்களின் பரப்பளவை அதிகரிக்கும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.விருதுநகர் மாவட்டத்தில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் நோக்கில் பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலமும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக  பசுமை விருதுநகர் இயக்கம் மூலமும் பல்வேறு கட்டங்களாக மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில் உலக பல்லுயிர் தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் 5 இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.இதன் தொடர்ச்சியாக, இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நில மறுசீரமைப்பு, பாலைவனமாதலை தடுத்தல் மற்றும் வறட்சியைத் தாங்கும் தன்மை ஆகியவற்றை நோக்கமாக  கொண்டு, ஜீன் மாதத்தில் 10 இலட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், சிவஞானபுரம் பகுதியில் 200 மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தும்,பின்னர், வெள்ளூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கி, சுற்றுச்சூழல் விழிப்புணர்பு பதாகைகளுடன் நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து, சிவகாசி ஊராட்சி ஒன்றியம் வடமலாபுரம் செக் போஸ்ட் அருகில் 400 மரக்கன்றுகள் மற்றும் ஆனையூர் பகுதியில் 100 மரக்கன்றுகள் நடும் பணிகளையும்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.மேலும், சமீப காலமாக புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றால் ஏற்படும் வறட்சியினை தடுப்பதற்கும் கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையினை போக்குவதற்கும், மரம் நடுதல் ஒன்றே சிறந்த தீர்வாக இருக்க முடியும் என்பதையும்  பல்வேறு சமூக ஆர்வலர்கள், அறிஞர்கள், ஊடகவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இதை மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டியதின் அவசியத்தை அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.இது போன்று தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இந்த சீரிய முயற்சியில் அனைவரும் தவறாது பங்கு கொண்டு ஒரு மக்கள் இயக்கமாக இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்து இந்த பூமியை அனைவருக்குமான ஒரு சிறந்த வாழ்விடமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 06, 2024

திருநங்கைகள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட சிறப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் வரும் 21.06.2024 அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. இம்முகாமில் கீழ்காணும் சேவைகள் செய்து  தரப்படுகின்றன.  1. திருநங்கைகள் நல வாரிய அட்டை வழங்குதல்2. ஆதார் அட்டையில்  திருத்தம் மேற்கொள்ளுதல்3. முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்குதல்4. ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்குதல்5. வாக்காளர் அட்டை வழங்குதல்  மேற்கண்ட நாளில் நடைபெறும் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் அனைத்து திருநங்கைகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Jun 06, 2024

பசுமைத் தமிழ்நாடு இயக்கம் மூலம் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு

விருதுநகர் மாவட்டம் வெள்ளூர் அரசு பள்ளியில் தமிழ்நாடு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் மூலம் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S., அவர்கள் மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கி  (05.06.2024) விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

Jun 06, 2024

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் மூலமாக குழந்தை இல்லாத தம்பதியர் சட்டப்படி பதிவு செய்து குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம்

இளைஞர் நீதி (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம் 2015, பிரிவு 56-ன்கீழ் தத்தெடுத்தல் திட்டத்தின் மூலம் குழந்தையை சட்டப்படி தத்தெடுத்து வளர்க்கலாம்.  அவ்வாறின்று சட்டத்திற்கு புறம்பாக குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது மற்றும் குழந்தையை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்து புகார் வரப்பெற்றால் சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், வழக்கு விசாரணையின்போது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.தத்தெடுத்தல் திட்டத்தின்கீழ் பெற்றோர் இருவரும் இல்லாத குழந்தைகள் (Orphan),  பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள் (Abandoned), பெற்றோரால் வளர்க்க முடியாமல் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் (Surrendered)  மற்றும் உறவுமுறையில் குழந்தைகளை (Relative child adoption) தத்தெடுத்து வளர்க்கலாம். அவ்வாறு குழந்தையை தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் மத்திய தத்துவள ஆதார மையத்தின் www.cara.nic.in  என்ற இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்யவேண்டும்.அவ்விணையதளத்தில் பெற்றோருக்கான (Parents)  என்ற பகுதியினை தெரிவு செய்து அதில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கணவன், மனைவி ஆகியோரின் பின்கண்ட சான்றுகளான 1. பிறப்புச்சான்று, 2. ஆதார்/வாக்காளர் அடையாள அட்டை/ரேசன் கார்டு, 3.பான்கார்டு, 4.திருமண பதிவுச்சான்று, 5.மருத்துவ அலுவலரின் உடற்தகுதிச்சான்று, 6.தம்பதியரின் புகைப்படம், 7.குடும்ப ஆண்டு வருமானச்சான்று, 8.அரசு/தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதற்கான சான்று, 9.நண்பர்/உறவினரால் வழங்கப்படும் ஆளறிச்சான்றுகளை பதிவேற்றம் செய்யவேண்டும்.மேலும், விபரங்களுக்கு “மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2/830-5, வ.உ.சி. நகர், சூலக்கரைமேடு, விருதுநகர் - 626003, தொலைபேசி எண். 04562 293946 அல்லது அரசு மருத்துவமனைகள் அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையம்அல்லது சிறப்பு தத்தெடுப்பு மையங்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Jun 06, 2024

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (05.06.2024) பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்.  I A S,  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை, அவர்களின் மறுவாழ்வு, இழப்பீடு பெற்று தருதல், கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களை குழந்தைகள் பாதுகாப்பில் திறம்பட பயன்படுத்துவது மற்றும் வழக்குகளில் விரைவான நீதியை பெற்று தருதல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலமாக குழந்தைகளை கண்காணித்தல், அவர்களை முன்பருவ கல்வியில் விடுதல் இன்றி சேர்த்தல்,சமூக நலத்துறையின் மூலம் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆற்றுப்படுத்துதல், அவர்களுக்கு சட்ட உதவியை பெற்று தருதல் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு நிதியினை வழங்குதல், குழந்தை திருமணம் நடைபெறா வண்ணம் குழந்தைகளை கல்வி பயில்வதை ஊக்குவிக்கவும், குழந்தை திருமணம் நடைபெற்றால் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.பின்னர், சுகாதாரத்துறையின் மூலம் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் கண்டறிதல் குறித்தவிழிப்புணர்வை மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் மூலமாக ஏற்படுத்திட அறிவுரைகள் வழங்கப்பட்டது.மகளிர் திட்டம் மூலமாக சுய உதவி குழுவினருக்கு கடன்களை பெற்றுதருதலில் இலக்குகளை எட்டுதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி பேச்சியம்மாள்,  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு சூரியமூர்த்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி விசாலாட்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி தனலட்சுமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி அருள்செல்வி மாவட்ட செயலாளர். வாழ்ந்து காட்டுவோம் திட்டம் திருமதி ராசாத்தி, குழந்தைகள் நலக்குழு தலைவர் திருமதி கெங்கா, அரசு வழக்கறிஞர்கள்இ சுகாதாரத் துறை அலுவலர்கள்  மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jun 06, 2024

கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கான 5-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

விருதுநகர் மாவட்டத்தில், தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வருகிற 2024 ஜுன் 10-ஆம் தேதி முதல் ஜீலை 10-ஆம்  தேதி வரை நடைபெற உள்ளதால் கால்நடை வளர்ப்போர் இதனை பயன்படுத்திக்  கொள்ளவேண்டும்.கோமாரி நோய்கோமாரி நோய் ஒரு வைரஸ் கிருமியால் உண்டாக்கப்படும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நோயாகும்.  இந்நோய் கண்ட கால்நடைகளுக்கு வாய் மற்றும் குழம்பு பகுதிகளில் புண்களும், காய்ச்சல் மற்றும் தீவனம் உண்ணாமை ஆகிய அறிகுறிகளோடு சினையுற்ற கால்நடைகளுக்கு கருச்சிதைவு ஏற்படுவதோடு, சினையின் தன்மை குறைந்து காணப்படும்.  இந்நோய் கொடிய தொற்று நோயாகும்.  காற்று மூலம் பரவுவதோடு ஒரு பண்ணையில் ஒரு மாட்டிற்கு காணப்பட்டால் அனைத்து கால்நடைகளுக்கும் உடனடியாக பரவ நேரிடும்.எனவே, இந்நோய் கண்ட கால்நடைகளுக்கு உடனடி இறப்பு ஏற்படாவிட்டாலும் உற்பத்தி திறன் அதிக பாதிப்பு ஏற்படும்.  கால் மற்றும் வாய் காணை (கோமாரி) நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு.  எருதுகளின் வேலைத்திறன் குறைவு கறவை மாடுகளில்  சினை பிடிப்பு தடைபடுவது இளங்கன்றுகளில் இறப்பு போன்ற பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகமாகும்.மேலும், இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலங்களில் ஏற்படும் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள் சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் போன்ற காரணங்களினால் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது.  இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின்  சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.தடுப்பூசிவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் குக்கிராமங்களில் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் கால் மற்றும் வாய் காணை (கோமாரி) நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் 4-வது சுற்று தடுப்பூசி போடும் பணி  நிறைவு பெற்றுள்ளது.தற்போது 5-வது சுற்று தடுப்பூசி போடும் பணி வருகிற 2024 ஜுன் 10-ஆம் தேதி முதல் ஜுலை 10ஆம்  தேதி வரை நடைபெற உள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1.79 இலட்சம் பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கு இந்த தடுப்பூசி பணி இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது.எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களது பசுக்கள் மற்றும் எருதுகள் எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் முன் அறிவிப்போடு நடைபெறும் கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசியை தங்களது கால்நடைகளுக்கு போட்டுக்கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Jun 05, 2024

வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று  ஆய்வு

விருதுநகர் மாவட்டம், மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை மையமான வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக் கல்லூரியில்  (04.06.2024) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருவதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Jun 05, 2024

வாக்கு எண்ணிக்கையில், அதிக வாக்குகள் பெற்று, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற திரு. ப.மாணிக்கம்தாகூர் அவர்களுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் சான்றிதழ் வழங்கினார்

விருதுநகர் மாவட்டம், மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை மையமான வி.எஸ்.வி.என்., பாலிடெக்னிக் கல்லூரியில்  (04.06.2024) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், அதிக வாக்குகள் பெற்று, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற திரு. ப.மாணிக்கம்தாகூர் அவர்களுக்கு தேர்தல் பொதுப்பார்வையாளர் திருநீலம் நம்தேவ் எக்கா I A S அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S., அவர்கள் சான்றிதழ் வழங்கினார். உடன்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ். எஸ். ராமச்சந்திரன் அவர்கள்,  நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு  அவர்கள்,  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள், விருதுநகர் சட்ட மன்ற உறுப்பினர் திரு. ஏ. ஆர். ஆர். சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர்  திரு.இரா.ராஜேந்திரன் ஆகியோர் உள்ளார்கள்.

1 2 ... 62 63 64 65 66 67 68 ... 74 75

AD's



More News