"உங்கள் ஆடையை உங்களது உயரத்திற்கு தகுந்தவாறு வெட்டவும்" என்ற பழமொழி சிக்கனத்தின் அவசியத்தை உணர்த்துகிறது.
அன்றாடம் விலைவாசி தான் உயர்கிறதே தவிர, தனி நபரின் வருமானம் உயர்ந்தபாடில்லை என சாமானியர்கள் புலம்பும் காலம் இது. அன்றாட செலவையும் சமாளித்து, எதிர்கால தேவையையும் சமாளிக்க சிக்கனம் ஒன்றே ஒரே தீர்வாக உள்ளது. தனிநபர் மட்டுமல்லாமல் ஒரு ஒட்டுமொத்த தேசத்தின் சேமிப்பையும் பொருளாதார பாதுகாப்பையும் ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் உலக சிக்கன நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
சிக்கனமாக செலவழித்து சேமித்த பணத்தை முதலீடாக்கினால் தொழில் வளமும் பெருகும். இந்தியாவில் சேமிப்பு பழக்கம் பாரம்பரியமானது. இந்திய குடும்பங்களில் குழந்தைக்களுக்கு சேமிப்பதற்கு தவறாமல் கற்றுத்தருகிறார்கள். "உங்கள் ஆடையை உங்களது உயரத்திற்கு தகுந்தவாறு வெட்டவும்" என்ற பழமொழி சிக்கனத்தின் அவசியத்தை உணர்த்துகிறது.
0
Leave a Reply