வாக்கு எண்ணிக்கையில், அதிக வாக்குகள் பெற்று, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற திரு. ப.மாணிக்கம்தாகூர் அவர்களுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் சான்றிதழ் வழங்கினார்
விருதுநகர் மாவட்டம், மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை மையமான வி.எஸ்.வி.என்., பாலிடெக்னிக் கல்லூரியில் (04.06.2024) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், அதிக வாக்குகள் பெற்று, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற திரு. ப.மாணிக்கம்தாகூர் அவர்களுக்கு தேர்தல் பொதுப்பார்வையாளர் திருநீலம் நம்தேவ் எக்கா I A S அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் சான்றிதழ் வழங்கினார். உடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ். எஸ். ராமச்சந்திரன் அவர்கள், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள், விருதுநகர் சட்ட மன்ற உறுப்பினர் திரு. ஏ. ஆர். ஆர். சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன் ஆகியோர் உள்ளார்கள்.
0
Leave a Reply