விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையை பொறுத்தவரையில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு தனித்தனியே 6 பிரிவுகளாக அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்காணிப்பில் காலை 08.00 மணிக்கு தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.வாக்கு எண்ணிக்கையின் போது முதலாவதாக காலை 8.00 மணிக்கு தபால் வாக்குகளும், அதன் தொடர்ச்சியாக காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். வாக்கு எண்ணும் பணிகளுக்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மேசையிலும் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர், நுண் பார்வையாளர், உதவியாளர் என 3 அலுவலர்கள் வீதம் சீரற்ற தெரிவு முறையில் தேர்வு செய்யப்பட்டு, 102 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், 102 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள் மற்றும் 102 நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 306 வாக்கு எண்ணிக்கை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு வாக்கு எண்ணிக்கையின் போதும், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தினால் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக 19 முதல் 23 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.அதன்படி, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில், 195-திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 304 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 22 சுற்றுகளிலும்,196-திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 311 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளிலும், 204-சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 286 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 21 சுற்றுகளிலும், 205-சிவகாசி சட்டமன்ற தொகுதியில் உள்ள 277 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 20 சுற்றுகளிலும், 206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 256 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 19 சுற்றுகளிலும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள 255 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 19 சுற்றுகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.மேலும் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் அனைவரும் பரிசோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணும் மையத்திற்குள் கைப்பேசி, கால்குலேட்டர் உள்ளிட்ட எந்தவிதமான மின்னணு சாதனங்களையும் கொண்டு செல்வதற்கு கட்டாயம் அனுமதி இல்லை.எனவே வாக்கு எண்ணிக்கையின் போது இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாடாளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு, (04.06.2024) வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி, வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடான ஆலோசனைக் கூட்டம் தேர்தல் பொதுப்பார்வையாளர் திருநிலம் நம்தேவ் எக்கா,I A S, அவர்கள் தலைமையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் முன்னிலையில் (03.06.2024) நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (01.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் களத்தூர் கிராமத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், தலா ரூ.2.78 இலட்சம் மதிப்பில் 64 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், மூவரைவென்றான் ஊராட்சியில் அயோத்தி தாஸ் பண்டிதர் திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வருவதையும், துலுக்கப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.20 இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருவதையும், முத்துக்குமாரபுரம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.80 இலட்சம் மதிப்பில் கதிர் அடிக்கும் களம் அமைக்கப்பட்டு வருவதையும்,ராமசந்திராபுரம் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழா பெருமளவு மரக்கன்றுகள் நடப்படும் திட்டத்தின் கீழ் ரூ.4 இலட்சம்; மதிப்பில் 800 மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதையும், 15-வது மானிய நிதி குழு திட்டத்தின் கீழ், ரூ.3.46 இலட்சம் ஆழ்துளைக் கிணறு மற்றும் பைப்லையன் அமைக்கப்பட்டு வருவதையும்,வலையபட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30.10 இலட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முத்துக்குமாரபுரம் கிராமத்தில் 'அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.80 இலட்சம் மதிப்பில் கதிர் அடிக்கும் களம் அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S., அவர்கள் (01.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மதுரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக வளாகத்தில் (01.06.2024) விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற நுண்கலை பயிற்சி முகாமில் அரசு /அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களால் வரையபபட்ட ஒவியங்களின் கண்காட்சியினை, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மா.சௌ சங்கீதா, I A S அவர்கள் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தனர்.விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்திய அரசு / அரசு பெறும் பள்ளி மாணவர்களுக்கான, மாவட்ட அளவிலான உண்டு உறைவிட கோடைகால பயிற்சி முகாம்கள் நடைபெற்றது.இந்த பயிற்சி முகாமில் விருதுநகர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் ஆர்வமும், திறனும் உள்ள 100 மாணவர்களை தேர்வு செய்து, மாணவர்களின் தனித்திறமைகளை மேம்படுத்தும் விதமாக இசை, தலைமைப்பண்பு, ஸ்போக்கன் இங்கிலீஸ், நுண்கலை, திருக்குறள் முற்றோதல் ஆகிய பயிற்சி முகாம்கள் 02.05.2024 முதல் 11.05.2024 வரை நடைபெற்றது.அதனை தொடர்ந்து, கோடை கால நுண்கலை பயிற்சி முகாமில் சிறந்த ஓவிய ஆசிரியர்கள் மற்றும் வல்லுநர்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் தங்களுடைய திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு படைப்புகளை மாணவர்கள் உருவாக்கினர். அதில் அரசு / அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களால் வரையப்பட்ட சிறந்த எண்ணெய் வண்ண ஓவியங்கள், நீர் வண்ண ஓவியங்கள், பழங்குடி ஓவியங்கள்(றுயசடi Pயiவெiபெ)இ துணி ஓவியங்கள், காகித அச்சுக்கலை ஓவியங்கள், பென்சில் ஓவியங்கள், கோடுகளால் வரையபட்ட ஓவியங்கள் என மொத்தம் 300க்கும் மேற்பட்ட ஒவியங்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்காக மதுரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக வளாகத்தில் ஒவியக்கண்காட்சியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.இந்து ஒவியக் கண்காட்சியானது 01.06.2024 முதல் 15.06.2024 வரை 15 நாட்களுக்கு நடைபெறும். எனவே, இந்த அருமையான படைப்புகளை படைத்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில்,அனைத்து பொதுமக்களும், மாணவ / மாணவியர்களும் இந்த ஓவியக்கண்காட்சியினை பார்வையிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அவர்கள் தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி வளர்மதி, பயிற்சி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (31.05. 2024) பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2023 -2024 ஆம் கல்வியாண்டில் கல்வி மற்றும் கல்வி இணை செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு காமராஜர் விருது மற்றும் பரிசுத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் வழங்கினார்.தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன. அதனடிப்படையில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளையும், மாணவ, மாணவிகளையும் ஊக்குவிக்கும் வகையில் காமராசர் விருது வழங்கி கவுரவிக்கிறது. தமிழக அரசு காமராஜர் விருதினை சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுத்து வருடத்திற்கு ஒருமுறை வழங்கி வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் இந்த வருடம் துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என அனைத்து விதமான பள்ளிகளில் இருந்தும், குழுக்கள் அமைத்து அதில் 4 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.அதனடிப்படையில், கிழவிகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு ரூ.25,000/- த்திற்கான காசோலையும், மானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50,000/-த்திற்கான காசோலையும், மம்சாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75,000/-த்திற்கான காசோலையும்,சூலக்கரை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1,00,000/-த்திற்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி, வரும் கல்வி ஆண்டில் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டுமென தலையாசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்நிகழ்வின் போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி இரா.வளர்மதி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) திருமதி பெ.இந்திரா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (F.L-1), F.L-2/F.L-3/FL-4A மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி, மக்களவை பொதுத்தேர்தல்- 2024 வாக்கு எண்ணிக்கை நாளான 04.06.2024 அன்று முழுவதும் தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேற்படி, உத்தரவினை மீறி செயல்படும் F.L-1> F.L-2/F.L-3/FL-4A மற்றும் FL-11 மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி கீழ் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் (31.05.2024) ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில், தாய் சேய் நலம் குறித்து நடத்தப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கு பெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் தாய் சேய் சிசு இறப்பு விகிதத்தை குறைத்து விருதுநகர் மாவட்டத்தினை தாய் சேய் இறப்பு இல்லாத மாவட்டமாக உருவாக்க மாவட்ட நிர்வாகம் முன்னெடுப்பில் கடந்த ஒரு மாத காலம் தாய் சேய் நலம் குறித்த பயிற்சி நடைபெற்றது.விருதுநகர்மாவட்டத்தில், மருத்துவ வசதிக்கு எந்த ஒரு குறைபாடும் கிடையாது. குறிப்பாக பேறுகாலத்தில் அவர்களுக்கு ஏற்பட கூடிய சிக்கல்கள் தவிர்ப்பதற்காக, குழந்தைபேறு அவர்களுக்கு மருத்துவமனையில் நடக்க வேண்டும். அதுவும் நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்களால்மற்றும்மருத்துவப்பணியாளர்களால்நடத்தப்படவேண்டும்என்பதுதான்அரசின்முக்கியமானமருத்துவக்கொள்கையாகும்.நமது மாவட்டத்தில் இரண்டு தலைமை மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஊர்களிலும் 2 கி.மீ தொலைவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 10 கி.மீட்டருக்குள் அரசு மருத்துவமனை உள்ளன.குழந்தை இறப்பு விகிதம் என்பது ஒரு குழந்தை பிறந்து, ஒரு வருடத்திற்குள் இறந்து போவது என்பதாகும். மேலும், குழந்தை பிறப்பின் போது பிரசவத்தில் தாய்மார்கள் இறப்பு என்பது இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த இறப்பிற்கு காரணம் இவ்வளவு மருத்துவ வசதிகள் மட்டும் போதாது இதனை எவ்வாறு தடுப்பது என்பது பற்றிய விழிப்புணர்வு தாய்மார்களிடம் இல்லததுதான் காரணம்.கர்ப்பகாலத்தில் ஆறு மாதத்திற்குள் தாய்மார்களுக்கு இரும்பு சத்தின் அளவு சரியாக இருப்பது குறித்தும் மற்றும் கர்ப்பகாலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.தமிழ்நாட்டில் நமது மாவட்டம் சிறந்த மருத்துவ முறைகளை வழங்கி வந்தாலும், குழந்தை இறப்பு விகிதம் அதிக அளவு காணப்படுகிறது. அதனால் அங்கன்வாடி பணியாளர்கள் அனைவரும் கருவுற்ற தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறதா என்பது குறித்தும், அவர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் அவர்களின் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி மற்றும் மனவளர்ச்சி குறைவாக காணப்படும் என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் குறிப்பாக இளம் வயதில் 18 வயதிற்குள் திருமணம் செய்து, இளம் தாய்மார்களாக உருவாகிறார்கள். இளம் வயதில் கருவுற்றால் அவருக்கு பிறக்கு குழந்தைகளும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறக்கும் சூழ்நிலை உருவாகிறது.கருவுற்ற தாய்மாருகளுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இரத்த சோகை ஆகிய காரணங்களினால் ஏற்படும் பிரச்சனைகளால் பிறக்கும் குழந்தைகளின் உடல் எடை குறைந்து அந்த குழந்தை உயிர் வாழ வாய்ப்பு குறைவாக காணப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகள் கவனிப்பு மருத்துவமனைகள் (சீமான் சென்டர்- CEMON CENTER) என்ற மருத்துவமனை ஆறு இடங்களில் உள்ளது, அதாவது சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய இடங்களில் உள்ளது. இந்த மருத்துவமனையில் பாதுகாப்பான பிரசவம் மற்றும் தாய் சேய் நலம் உறுதிப்படுத்தப்படும்.இப்பயிற்சியில் கலந்து கொண்ட அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி நமது மாவட்டத்தில் தாய் மற்றும் சிசு இறப்பு விகிதம் குறைப்பதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.இப்பயிற்சியில் 850 அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைத்து அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பயிற்சி வழங்கிய மருத்துவ அலுவலர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பயிற்சி கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டம்) திருமதி தனலெட்சுமி, தலைமை மருத்துவர் திருமதி பிச்சைகாளி (அருப்புக்கோட்டை), தலைமை மருத்துவர் திரு.அய்யனார்(சிவகாசி), மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை, Redington Foundation மற்றும் Learning Links Foundation சார்பில் அரசு பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் கிராமப்புற பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்த Digital Literacy தொடர்பான பேருந்து சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தவும், உயர்கல்வி, போட்டித்தேர்வு, வேலைவாய்ப்பு குறித்து வழிகாட்டவும், இளம் பசுமையாளர்களை உருவாக்கவும், அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப்பணிகள் குறித்து உரிய வழிகாட்டுதல் வழங்கவும், தொழிற்சாலைகள், விண்வெளி தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்வதற்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பாக அரசு பள்ளிகளில் 5 முதல் 9 -ஆம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு யிலும் மாணவர்களுக்கு, Digital Literacy தொடர்பாக (MS-Office, Basics of Computer, E-mail Creation ) தொடர்பாகவும், கல்லூரி மாணவர்கள் Cyber Crime, Cyber safety மற்றும் Artificial Intelligence தொடர்பாகவும், கிராமப்புற பொதுமக்கள் ; Aadhar card, Pan card, Digital Money Transfer தொடர்பாகவும், அறிந்து, தெரிந்து பயன்பெறும் வகையில் Digital Literacy தொடர்பான பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டு,Redington Foundation, Learning Links Foundation சார்பில் இலவசமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. தற்பொழுது வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் அடிப்படையான கணினி தொழில்நுட்பங்களை அரசு பள்ளி மாணவர்கள் Digital Literacy பயிற்சி மூலமாக அறிந்து பயன்பெற முடியும்.தற்பொழுது வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இணையவழி குற்றம் என்றால் என்ன? அதில் பாதிக்கப்படாமல் இருப்பது எப்படி? இணையவழி பாதுகாப்பு தொடர்பான படிப்புகள் குறித்தும், தொழில்நுட்ப கல்வியறிவு குறித்தும், இணையவழி குற்றங்களிலிருந்து மாணவர்கள் தங்களையும், தங்களுடைய தரவுகளையும் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும், கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளன. மேலும் செயற்கை நுண்ணறிவு (AI) நமது சமூகத்தின் பல்வேறு அம்சங்களை முற்றிலும் மாற்றி வடிவமைக்கும் ஆற்றல் கொண்ட ஒரு தொழில்நுட்பமாகும். AI தொழில்நுட்பம் Machine Learning என்னும் கணினி நிரலாக்க மொழியை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாகும். இது எதிர்காலத்தில் பல்வேறு முன்னேற்றங்களை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல மேம்பட்ட Automation மற்றும் இயந்திரங்கள், தானாக முடிவெடுக்கும் திறன்கள் வளர்ச்சி பெறும். AI தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. எனவே,AI தொழில்நுட்பம் குறித்து கல்லூரி மாணவர்கள் அறிந்து, தெரிந்து பயன்பெறும் வகையில் இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.இந்த Digital பேருந்தானது, மாவட்டம் முழுவதும் 5 வருடத்திற்கு தொடர்ந்து இயக்கப்பட்டு சேவைகள் வழங்கப்பட உள்ளது. 2024 -2025 ஆம் ஆண்டில் சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை வட்டாரத்திலும், 2025-2026 விருதுநகர் மற்றும் சாத்தூர் வட்டாரத்திலும், 2026-2027 திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, இராஜபாளையம் வட்டாரத்திலும், 2027-2028 அருப்புக்கோட்டை, நரிக்குடி வட்டாரத்திலும், 2028-2029 காரியாபட்டி, திருச்சுழி வட்டாரத்திலும் Digital பேருந்து இயக்கப்பட்டு, Digital Literacy தொடர்பான சேவைகள் வழங்கப்பட உள்ளது. எனவே, இந்த பயிற்சியை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் 3500 ஏக்கர் பசுந்தாள் உர விதைகள் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர்க்கு 20 கிலோ தக்கைப் பூண்டு விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.விருதுநகர் மாவட்டத்தில் 2024-2025-ம் ஆண்டில் தமிழக முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் பசுந்தாள் உர உற்பத்தியினை ஊக்குவித்தல் இனம் செயல்படுத்தப்படவுள்ளது. தற்போது உள்ள தொழில் முறை வேளாண்மையில் ஒரே பயிரை சாகுபடி செய்வதாலும் மண்ணிலிருந்து சத்துக்களை அதிக உறிஞ்சும் வீரிய ஒட்டு ரக பயிர்களை சாகுபடி செய்வதாலும் மண்ணின் வளம் குறைந்து கொண்டே வருகிறது.இது தவிர உற்பத்தி அதிகரிப்பதற்கென அதிக அளவில் இராசயன உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சி மருந்துகள், போன்றவற்றை பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மண்வளமும், நலமும் குன்றி அதிக அளவில் நிலங்கள் களர்; உவர், அமில நிலங்களாக மாறியுள்ளன.இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் மலடான மண்ணைத்தான் நம் எதிர்கால தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்லும் நிலை ஏற்படும். மண்வளத்தை பேணி காக்கவும், மக்கள் நலம் காக்கும் விதமாகவும் உயிர்ம வேளாண்மை அதிகரித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன்பெற தகுதி உடையவர் ஆவர். விவசாயிகள் நேரடியாக உழவன் செயலில் பதிவு செய்து இத்திட்டத்தின் பயனை எளிதில் பெறலாம். விவசாயிகள் நில ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.