25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jun 15, 2024

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள தகவல் பகுப்பாளர் பதவிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ்க்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் (முற்றிலும் தற்காலிக பணியிடம்) நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடம்:1. தகவல் பகுப்பாளர் (Data Analyst)   பணியிடம்   - 01தொகுப்பூதியம் ரூ.18,536 /-ஒரு மாதத்திற்குகல்வித்தகுதி அனுபவம் மற்றும் வயது:அடிப்படை கல்வித்தகுதி : புள்ளியியல்/ கணிதம்/ பொருளியல்/ கணினி அறிவியல் (BCA)  பட்டப்படிப்பு சான்று பெற்று இருத்தல் வேண்டும்.பணி அனுபவம் :  கணினி சார்ந்த பணிகளில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.வயது வரம்பு :   42 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.மேற்குரிய பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.மேலும் உரிய விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணைய தளமான www.virudhunagar.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.மேற்கண்ட பதவிகளுக்கான தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் (Pass port Size)  28.06.2024  மாலை 5.30 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.மேற்குறிப்பிட்ட தேதிக்குப் பின்வரும் விண்ணப்பங்கள் தகவலின்றி நிராகரிக்கப்படும்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,2/830-5 - வ.உ.சி.நகர், சூலக்கரைமேடு,விருதுநகர் - 626 003.தொலை பேசி எண். 04562-293946.

Jun 15, 2024

சாத்தூர் வட்டத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில்”முகாம்

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும்  சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட “உங்களை தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில்”முகாமானது 19.06.2024 அன்று காலை 9 மணி முதல் மறுநாள் 20.06.2024 அன்று காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும், 19.06.2024 அன்று காலை 9 மணி முதல் மாலை 04.30 மணி வரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து மாவட்ட நிலை அலுவலர்களும் கள ஆய்வில் ஈடுபட்டு, அந்த வட்டத்தில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி சென்று அடைவதை ஆய்வு செய்ய உள்ளனர்.  அதன் ஒரு பகுதியாக (19.06.2024) மாலை 04.30 மணி முதல் 6 மணி வரை சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து மக்களை சந்தித்து குறைகள் கேட்பதும், மாலை 6 மணி முதல் முதல்நிலை அலுவலர்களுடன் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து இரவில் தங்கி பணியாற்றவும் உள்ளனர்.எனவே, சாத்தூர் வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் தெரிவித்து, அரசின் திட்டங்கள்  அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 15, 2024

மாநில நெடுஞ்சாலைகளில் அனுமதியின்றி வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்படும் பட்சத்தில், வேகத்தடைகளை அமைத்த அமைப்பினர் / தனி நபர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள சாலைகளில் பொதுமக்கள் சிலர் தன்னிச்சையாக வேகத்தடைகளை சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி அமைத்துள்ளார்கள் என்றும்,  வேகத்தடைகள் உரிய அளவீட்டின்படி அமைக்கப்படாத காரணத்தினால் பல விபத்துகள் ஏற்பட்டு, அதனால் உயிர்சேதங்களும், கொடுங்காயங்களும் ஏற்படுகின்றன என்றும், முறையற்ற வேகத்தடைகளை தொடர்ச்சியாக கடந்து செல்லும் வாகன ஒட்டிகளுக்கு முதுகுதண்டுவடம் மற்றும் இடுப்பு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்றும், மேலும் இதனால் வாகனத்திலும் பழுதுகள் ஏற்படுகின்றன எனத் தெரிவித்து, உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. மேற்படி, புகார்களின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர் அவர்களால் கோரப்பட்டதற்கு மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 255 வேகத்தடைகளில் 46 இடங்களில் வேகத்தடைகள் போக்குவரத்திற்கு இடையூறாக விபத்து ஏற்படுத்தும் வகையிலும், மேலும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள் செல்லுவதற்கும் தடை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் ஊரக பகுதிகளில் உள்ள 672 வேகத்தடைகளில், உரிய அளவீட்டின்படி இல்லாத வேகத்தடைகளையும், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள வேகத்தடைகளையும் கண்டறிய மாவட்ட ஆட்சியர் அவர்களால் உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) மூலமாக குழுக்கள் அமைக்கப்பட்டு, மேற்படி வேகத்தடைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.  Indian Road Congress(IRC)  அளவீட்டின்படி இல்லாத வேகத்தடைகளையும், அவசியமற்ற இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வேகத்தடைகளையும்,  போக்குவரத்திற்கு இடையூறாக விபத்து ஏற்படுத்தும் வகையிலும், மேலும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள் செல்லுவதற்கும் தடை ஏற்படுத்தும் வகையிலும் உள்ள வேகத்தடைகளை சம்மந்தப்பட்ட துறையினர், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருடன் ஒத்துழைப்புடன் அகற்றிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.வேகத்தடைகள் அவசியமாக தேவைப்படும் இடங்களில், வேகத்தடைகளுக்கு பதிலாக Rumble stripe அமைக்கலாமா என்பது குறித்து ஆய்வு செய்தும், சாலை பாதுகாப்பிற்கு வேகத்தடை அமைக்க வேண்டிய அவசியமான நேர்வுகளில் மாவட்ட சாலைப்பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் விவாதப்பொருளாக வைத்து ஒப்புதல் பெற்ற பின்புதான் சம்மந்தப்பட்ட துறையினர் Indian Road Congress(IRC) அளவீட்டின்படி வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.வேகத்தடைகள் ஆனது Indian Road Congress – 99-1988-ல் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின்படி அமைக்கப்பட வேண்டும்.அதாவது அகலம் 3.7 மீட்டர், நடு மையம் 10 செ.மீ மற்றும் வட்டம் 17 மீட்டர்(ரேடியஸ்) என்ற அளவில் தான் அமைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில், சாலைகளில் உரிய அனுமதியின்றி வேகத்தடைகள் அமைக்க கூடாது என்றும், அவ்வாறு அனுமதியின்றி வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்படும் பட்சத்தில், வேகத்தடைகளை அமைத்த அமைப்பினர் /தனி நபர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் சம்மந்தப்பட்ட துறையினர் மூலமாக மேற்கொள்ளப்படும் என்றும், மேலும் அனுமதியின்றி வேகத்தடையினை அமைத்த அமைப்பினர் / தனி நபர் ஆகியோர்களின் சொந்த செலவிலேயே வேகத்தடைகளை அகற்ற உரிய நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 14, 2024

வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் முன்றாம் கட்ட அகழாய்வு பணிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில், 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்க உள்ள நிலையில், அதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் கடந்த 16.03.2022 அன்று முதற்கட்டமாகவும், 06.04.2023 அன்று இரண்டாம் கட்டமாகவும், அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்றன.அப்போது நுண் கற்காலம் முதல் வரலாற்று தொடக்க காலம் வரையிலான இரும்பு கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டன. அதோடு, நுண்கற்கால கருவிகள் மற்றும் பல வகையான பாசிமணிகள், சூடு மண்ணாலான காதணிகள், பொம்மைகள், தக்களி, சங்க கால வளையல்கள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள், தங்க அணிகலன்கள், விலை மதிப்புள்ள கல் மணிகள் என சுமார் 7,914 பழங்கால பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.அதனை தொடர்ந்து, 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்நிகழ்ச்சியில், தொல்லியல் துறை அலுவலர்கள், வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jun 14, 2024

நீட் தேர்வில் மாவட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் அளவில் முதலிடம் பிடித்த இராஜபாளையம் பி.ஏ.சி.எம் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (13.06.2024) இராஜபாளையம் பி.ஏ.சி.எம் மேல்நிலைப்பள்ளியில் பயின்று நீட் தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.அதன்படி, நீட் தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளிகள் அளவில் இராஜபாளையம் பி.ஏ.சி.எம் மேல்நிலைப்பள்ளியில் பயின்று தனது முதல் முயற்சியிலேயே முதல் இடம் பிடித்த எஸ்.சஞ்சய் ராஜ் என்ற மாணவரும், இரண்டாவது முயற்சியில் முதலிடம் பிடித்த எஸ்.சிவபிரியேசன் என்ற மாணவரும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றனர்.இந்நிகழ்வில், விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி வளர்மதி,சிவகாசி மாவட்ட கல்வி அலுவலர் திரு.சிதம்பரநாதன், பி.ஏ.சி.எம் பள்ளி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு.மாரிமுத்து உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jun 14, 2024

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேரும் மற்றும் இதுவரை கல்லூரியில் சேர இயலாத மாணவர்களுக்காக சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேரும் மற்றும் இதுவரை கல்லூரியில் சேர இயலாத மாணவர்களுக்காக சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில்  (13.06.2024) நடைபெற்றது.தமிழக அரசு, மாணவர்களின் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களை அதிகமாக உயர்கல்விக்கு சேர்க்கை பெறும் நோக்கில், பல்வேறு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத, குறிப்பிட்ட துறைக்கு விண்ணப்பித்து சேர்க்கை கிடைக்கப் பெறாத மாணவர்களுக்கு வழிக்காட்டு விதமாக சிறப்பு குறைதீர்க்கும்  கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாணவர்களிடமிருந்து, உயர்கல்வி பயில்வதற்கான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான சுமார் 100 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், ஒவ்வொரு மாணவரிடமும் தனித்தனியாக அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.பின்னர், உயர்கல்விக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் சந்தேகங்கள் மற்றும் குறைகளையும்,உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர்கள் ஒவ்வொருவரிடமும் அதற்கான காரணங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம், சரியான வழிகாட்டியின்மை, பாடப்பிரிவு கிடைக்காத நிலை போன்ற காரணங்களால் உயர்கல்வி தொடர முடியாமல் இருப்பதாக தெரிவித்த மாணவ, மாணவியர்களிடம், அரசின் மூலம் வழங்கப்படும் திட்டங்கள், சலுகைகள், ஊக்கத்தொகைகள், எதிர்கால வேலைவாய்ப்புகள், மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு பாடப்பிரிவு துறைகளை தேர்ந்தெடுப்பது உள்ளிட்டவை குறித்தும், தீர்வுகளை எடுத்துக்கூறியும், உயர்கல்வி தொடர்வதற்கான உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி வளர்மதி, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, உட்பட அரசு அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.  

Jun 14, 2024

எம். ரெட்டியாபட்டி ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், எம். ரெட்டியாபட்டி ஊராட்சியில்,  (13.06.2024)செய்திமக்கள்தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர் 

Jun 14, 2024

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.06.2024 அன்று நடைபெறவுள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் ஜீன் -2024 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.06.2024 அன்று காலை 11.00 மணியளவில், விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.மேற்படி, கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன்,  I A S., அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்

Jun 14, 2024

அம்ரூத் முழுமை திட்டம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில்  (13.06.2024) விருதுநகர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் சார்பாக ராஜபாளையம் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் உள்ளடக்கிய பகுதியை - ராஜபாளையம் கூட்டு உள்ளூர் திட்டக் குழும பகுதிக்கான அம்ரூத் ( Atal Mission for Rejuvenation and Urban Transformation - AMRUT ) முழுமை திட்டத்தினை ( Master Plan ) செயல்படுத்துவது தொடர்பாக அரசுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் துணை இயக்குனர் ( திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திரு. ப. தேவராஜ்.  I. A. S, அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், I. A. S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Jun 14, 2024

ராஜபாளையத்தில் அரசு அலுவலர்களிடம் சாலை பணிகள் குறித்து கள ஆய்வு

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ( 13.06.2024) புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென்காசி சாலை வரை புதிய இணைப்பு சாலை  அமைப்பது தொடர்பாக ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் திரு. எஸ். தங்கபாண்டியன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், I A S, அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் சாலை பணிகள் குறித்து கேட்டறிந்து, அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

1 2 ... 59 60 61 62 63 64 65 ... 74 75

AD's



More News