25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


திருநங்கைகள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட சிறப்பு முகாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருநங்கைகள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட சிறப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் வரும் 21.06.2024 அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. இம்முகாமில் கீழ்காணும் சேவைகள் செய்து  தரப்படுகின்றன.  

1. திருநங்கைகள் நல வாரிய அட்டை வழங்குதல்
2. ஆதார் அட்டையில்  திருத்தம் மேற்கொள்ளுதல்
3. முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்குதல்
4. ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்குதல்
5. வாக்காளர் அட்டை வழங்குதல்
 

 மேற்கண்ட நாளில் நடைபெறும் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் அனைத்து திருநங்கைகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News