25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக துவங்கப்பட்ட செம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் (அருப்புக்கோட்டை வட்டாரம்)  மற்றும்  இலுப்பையூர்  ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ( நரிக்குடி வட்டாரம்) மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM)  கீழ் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையிலான கீழ்கண்ட பணியாளர்கள் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது.

          மருந்தாளுநர்களுக்கு 2 பணியிடங்களும்,  ஆய்வக நுட்புநர்நிலை-3 (Lab Technician Gr-III) பணியாளர்களுக்கு 8 பணியிடங்களும்,  செவிலியர்களுக்கு, (RCH,NCD,RBSK,MMU,NBSU) 60 பணியிடங்களும்,  பல்நோக்கு சுகாதாரபணியாளர் / சுகாதார ஆய்வாளர் நிலை-  II (MPHW HI Gr-II) பணியாளர்களுக்கு பணியிடங்களும்,  பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு (Multi Purpose Hospital Worker)   பணியிடங்களும் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது.

        இப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான தகுதிகள் மற்றும் விண்ணப்படிவம் ஆகியவை குறித்த விவரத்தினை இம்மாவட்டத்தின்    http://virudhunagar.nic.in  என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

           மேலும், நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 23.07.2025 அன்று முதல்    07.08.2025 அன்று மாலை 5.45  மணி வரை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News