25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


பழமொழி.

Apr 18, 2023

ஆற்று நீர் வாதம் போக்கும். அருவி நீர் பித்தம் போக்கும். சோற்று நீர் இரண்டும் போக்கும்.

ஆற்று நீர் வாதம் போக்கும். அருவி நீர் பித்தம் போக்கும். சோற்று நீர் இரண்டும் போக்கும்.பொருள்:ஆறு மலையிலிருந்து வருவதால் பல மூலிகைகள் அதில் கலந்திருக்கும். அதில் குளித்தால், வாதம் உள்ளிட்ட நோய்கள் நீங்கும்.அருவி நீரில் பல கனிமச் சத்துக்கள்மிகுந்து காணப்படுவதால் இதனைக் கனிமச்சத்து நீர்  ( MINERAL WATER ) என்றும் கூறலாம். பருகினால் அல்லது இதில் குளித்தால் பித்தநோய், கல்லீரல் தொடர்புடைய நோய்கள், கீழ்வாதம் உள்ளிட்ட பல நோய்கள் போகும்.சோற்று நீர் என்பது நீராகாரம். இது அருந்திவர வாதம், பித்தம் இரண்டும் நீங்கும் எனப் பல்வேறு சித்த மருத்துவக் குறிப்புகளை பழமொழி எடுத்துரைக்கிறது.

Apr 11, 2023

'இஞ்சி தின்ற குரங்கு போல"

“இஞ்சி தின்ற குரங்கு போல ”   பொருள்இஞ்சியைப் போன்ற தோற்றமுள்ள காட்டு மஞ்சள் கிழங்கின் மீது, குரங்குக்கு மிகுந்த விருப்பம். இது, மாங்காய் இஞ்சியைப் போன்றது.காரமில்லாதது சற்று இனிப்பும் அதில் இருக்கும். அதை ருசி கண்ட குரங்கு, அதுபோலவே தோன்றும் சாதாரண இஞ்சியைக் கண்டு ஏமாந்து, கடித்துச் சுவைத்து விடும்.அப்போது ஏற்படும் அதன் முகபாவத்தையும், கோபத்தையும் குறிப்பது தான் இந்தப் பழமொழி.

Apr 05, 2023

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?அடுப்பூதும் பெண்ணுக்கு படி பூ எதற்கு?பொருள்: ஒரு படி பூவை தலையில் வைத்துக்கொண்டு அடுப்பை ஊதினால், நீ ஊதுற அந்த நேரத்தில்  அடுப்பின் அனலுக்கு தலையில் வைத்த ஒரு படி பூவும் கருகி போகும். ஆகவே சமையல் முடித்து குளித்து பூவை சூடுங்கள் என்று அறிவுரை சொல்லுவார்கள்.

Apr 04, 2023

ஆலை இல்லா ஊருக்கு, இலுப்பைப்பூ சர்க்கரை

ஆலை இல்லா ஊருக்கு, இலுப்பைப்பூ சர்க்கரை.பொருள்:இலுப்பைப்பூ இனிப்புச்சுவை உடையது.பழங் காலத்தில் சர்க்கரை எனும் இனிப்புப் பொருளை கண்டு பிடிக்காத காலங்களில் இதனையே இனிப்புக்காக உண்டனர். இப்போதும் பழங்குடிகள் இனிப்புக்காக இலுப்பைப்பூவை பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. இலுப்பையின் பூமட்டும் அல்ல இதன் இலை, பட்டை, காய், பழம், வேர் என அனைத்துமே மருத்துவ குணம் உடையது.தாகத்தைத் தீர்க்கும் மலச் சிக்கலைப் போக்கும். மருத்துவ குணம் நிறைந்த இலுப்பைப்பூவில் குளுக்கோஸ் அதிகம் என்பதாலேயே இனிப்புச்சுவை உருவாகிறது.

Mar 28, 2023

சோறு கண்ட இடம் சொர்க்கம்.

இந்த பழமொழியானது ,தற்காலத்தில் உழைக்காமல் சாப்பிடுபவர்களை, கேலி செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதன் உண்மை பொருள் யாதெனில், ஐப்பசி பௌர்ணமியில் சிவன் கோவில்களில் பச்சரிசி சாதத்தால் சிவனுக்கு அபிஷேகம் நடக்கும். அதை காண்பவருக்கு சொர்க்கம் கிட்டும் என்பதே இதன் பொருள்.

Mar 22, 2023

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை புடிப்பான்

,இன்றைய தலைமுறையினரிடத்தில் இந்த பழமொழி இவ்வாறு கூறுவதை நாம் கேட்டிருப்போம் ஆனால் அன்று வயதானவர்கள் இந்த பழமொழி அவ்வாறு கூற வில்லை. அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரி- யிலும் கூட கொடை கொடுப்பான். இது தான் சரியான பழமொழி .அதாவது மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள், நேரம் காலம் பார்க்காமல் எந்த நேரத்திலும் மற்றவர்களுக்கு உதவும் வள்ளல்களை குறித்து, நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்த பழமொழி. காலப்போக்கில் இவ்வாறு மறுவி விட்டது. 

Sep 13, 2022

நம்புன மனுசன் வாரான் சொம்புல தண்ணி கொடு"

“நம்புன மனுசன் வாரான் சொம்புல தண்ணி கொடு”நல்லவன் வருகிறான் .செம்பை எடுத்து உள்ளே வை. என்பதை வஞ்சப்புகழ்ச்சியணியாக மாற்றி கொங்கு தேசத்தில் சொல்கிறார்கள். 

1 2 ... 10 11 12 13 14 15 16 17 18 19

AD's



More News