தேசிய விளையாட்டு பாட்மின்டனில் இரண்டு தங்கம் வென்றார் சதிஷ்குமார்.
இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் ஆண்களுக்கான ஒற்றையர் பாட்மின்டன் பைனலில் தமிழக வீரர் சதிஷ் குமார் தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இதன் பைனலில் தமிழக வீரர் சதிஷ் குமார் கருணாகரன், உத்தரகாண்ட்டின் சூர்யாக்ஸ் ராவத் மோதினார். இதில் சதிஷ்குமார் 21-17, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். கலப்பு இரட்டையர் பைனலில் தமிழகத்தின் சதிஷ் குமார், ஆத்யா ஜோடி, பைனலில் மகாராஷ்டிராவின் தீப் ராம்பியா, அக்சயா ஜோடியை எதிர்கொண்டது. இதில் தமிழக ஜோடி 21-11, 20-22, 21-8 போராடி வெற்றி பெற்று, தங்கம் வசப்படுத்தியது.
பெண்களுக்கான பாட்மின்டன் ஒற்றையர் பைனலில் ஹரியானாவின் அன்மோல், உத்தரகாண்ட்டின் அனுபமாவை சந்தித்தார்.இதில் அன்மோல் 21-16, 22-20 என நேர் செட்டில் வெற்றி பெற்று தங்கப்ப தக்கம் வென்றார்.
பெண்கள் இரட்டையரில் கர்நாடகாவின் அஷ்வினி, ஷிகா ஜோடி 21-17, 15-21, 21-12 என காயத்ரி, மானசா ஜோடியை வென்று தங்கம் கைப்பற்றியது. தமிழ கத்தின் வர்ஷினி, அருள் பாலா ஜோடி வெண்கலம் வென்றது.
0
Leave a Reply