வீட்டு தோட்டம் பராமரிப்புகள்
வெள்ளரிச் செடியை சூரியகாந்திச் செடியின் அருகில் வளர்த்தால் , வெள்ளரிக்காய் வழக்கத்தை விட இனிமையாய் இருக்கும்.இவை இரண்டிற்குமே ஒரே மாதிரியான மண் போதுமானது. அதே நேரம் சூரியகாந்திக் கிளைகள் வெள்ளரிக் கொடி ஏற வசதியாக இருக்கும்
காய்கறி வேக வைத்த மற்றும் பிற சமையல் வேலைக்குப் பின் கிடைக்கும் நீரை வீணாக்காமல் அதை செடிகளுக்குப் பயன்படுத்தலாம்.ஏனெனில் இவற்றில் பல சத்துக்கள் உள்ளன இந்த நீரை சூடு ஆறிய பிறகு சேமித்து வைத்து பின்னர் செடிகளுக்கு ஊற்றலாம் .
பால் பவுடரை மண்ணில் கலப்பதன் மூலம், ருசியான ரசம் மிகுந்த தக்காளிகளை பெற முடியும் .எப்சம் உப்பு அதிக அளவு மக்னீசியம் மற்றும் சல்பேட் சத்துக்களைக் கொண்டது. தாவரங்கள் நன்கு வளர இது உதவி செய்யும். தக்காளி மற்றும் மிளகாய் ஆகியவை இதிலிருந்து அதிக பலனைப் பெறுகின்றன.
டயாபர் உறையைக் கிழித்து அதிலுள்ள ஜெல்லை தண்ணீரில் முக்கி எடுங்கள். அதை மண்ணோடு கலந்து விட்டால் இவை ஈரத்தை உறிஞ்சி செடிகள் காயாமல் நன்கு வளர உதவும்.இவற்றை உணவுத் தாவரங்களில் உபயோகிப்பதை தவிருங்கள்.
0
Leave a Reply