பாராலிம்பிக் சாம்பியன்கள் டில்லியில் உற்சாக வரவேற்பு
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்றனர். பாராலிம்பிக் முடிந்த நிலையில் பாரிசில் இருந்து கிளம்பிய நமது நட்சத்திரங்கள் நேற்று டில்லி விமான நிலையம் வந்திறங்கினர். இவர்களுக்கு பாரம்பரிய மேளதாளம் முழங்க ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பாராலிம்பிக்கில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கான பரிசுத் தொகையை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்தார். தங்கம் வென்றவருக்கு ரூ.75, லட்சம், வெள்ளி ,வெண்கலம் வென்றவருக்கு முறையே ரூ. 50, லட்சம், ரூ.30, லட்சம் வழங்கப்படும். கலப்பு பிரிவில் பதக்கம் வென்ற ஷித்தல் தேவி உட்பட ஒவ்வொருவருக்கும் தலா ரூ.22.50 லட்சம் தரப்படும்.
மன்சுக் மாண்டவியா கூறுகையில் பாரிசில் 29 பதக்கம் வென்று சாதித்துள்ளோம். வரும் 2028-ல் லாஸ் ஏஞ்சல்சில் நடக்க உள்ள பாராலிம்பிக்கில் இன்னும் அதிகமான பதக்கங்களை வெல்வோம் என்றார்.
0
Leave a Reply