பாலித்தீன் பைகளில் உள்ள உணவுப் பொருள்களை சாப்பிட்டு பாதிப்பிற்கு உள்ளாகும் வன விலங்குகள்
அய்யனார் கோவில் ஆறு அதன் அருகே அமைந்துள்ள நீர்காத்த அய்யனார் கோவில் என பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் சுற்றுலா தளமாக உள்ளது. பொது மக்கள் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்களில் உணவுகளை கொண்டு வந்து வனவிலங்குகளுக்கு உணவு அளிப்பதுடன் கழிவுகளை ஆற்றின் அருகே போட்டு செல்கின்றனர்.
இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் வனப்பகுதியில் யானை, மான், கரடி, காட்டெருமை, சாம்பல் நிற அணில் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வன விலங்குகள் அதிகம் உள்ளது.இளைஞர்கள் ஆற்றின் அருகே சமைத்து போதையில் பாட்டில்களை உடைத்து விலங்குகள் நடமாடும் பகுதியில் வீசிசெல்வதும் தொடர்கிறது. குருங்குகள், இரையைத் தேடி காட்டிற்குள் செல்லாமல் அங்கு கீழே விழுந்து கிடக்கம் பாலிதீன் பைகளில் உள்ள உணவுகளை பையுடன் சேர்த்து சாப்பிடுகிறது. இதனால் வனவிலங்குகள் பாதிப்பிற்குள்ளாகின்றன்.
இதைத் தவிர்க்க ஆற்றிற்கு வருபவர்களை நன்றாகக் கண்காணித்தும் சோதனைக் கூடத்தை தீவிரக் கண்காணிப்பிற்கு வனத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என வனவிலங்கு சமூக அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர். எத்தனை கண்காணிப்பாளர்கள் இருப்பினும் மக்களாகிய நாமும் இவற்றை கடைபிடிக்க வேண்டும்.
0
Leave a Reply