புண்ணிய மாதமான புரட்டாசி மாதம்
புண்ணிய மாதமான புரட்டாசி மாதம் இந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி துவங்குகிறது.
புரட்டாசியின் முதல் மற்றும் கடைசி ஆகிய இரண்டு நாட்களுமே பௌர்ணமி திதியாக அமைவதால், இந்த நாளில் செய்யப்படும் சத்ய நாராயண பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
செப்டம்பர் 17ம் தேதி துவங்கி, அக்டோபர் 17ம் தேதி வரை அமைந்துள்ள புரட்டாசி மாதம் பல சிறப்புகளை உள்ளடக்கியதாக உள்ளது.
புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையில் சங்கடஹர சதுர்த்தியும் வது சனிக்கிழமையில் ஏகாதசியும் கடைசி சனிக்கிழமையில் திருவோண விரதம் விஜய் தசமி ஆகியனும் , அதற்கு அடுத்த நாளே ஏகாதசியும்வருவதாக அமைந்துள்ளது.
அக்டோபர் 02 ம் தேதியான புதன் கிழமை மகாளய அமாவாசை யும், 2 பவுர்ணமிகளும் புரட்டாசி மாதத்தில் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த மாதத்தில் அசைவத்தை அறவே தவிர்க்க வேண்டும். சைவ உணவை உண்டு, விரதமிருந்து வெங்கடாசலபதியை வழிப்படுவது சிறப்பு.
இந்த மாத சனிக்கிழமைகளில் விரதமிருந்து புரட்டாசி தளிகை சமைத்து பெருமாளை வழிப்படுவது சிறப்பு. இந்த நாளில் 108 திவ்ய தேசங்களிலும் வழிபாடு களைக்கட்டும்.
இந்த மாதத்தில் திருப்பதி கோயிலுக்கு சென்று வழிப்பட்டு முடி காணிக்கைகளை செலுத்தலாம். பெருமாளுக்கு காணிக்கை, நேர்த்தி கடன் களை செய்ய உகந்த மாதம்.
இந்த மாதத்தில் திருமணம் போன்ற விஷேங்கள் செய்வதில்லை. இந்த மாதத்தில் மட்டும் தான் மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபாடுவார்கள்.
0
Leave a Reply