நம் நகரில் மாநில கூடைப்பந்து போட்டி
நம் நகரில் மாநில கூடைப்பந்து போட்டி இராஜபாளையம் சிட்டி பேஸ்கெட் பால் கிளப் சார்பில் மூன்று நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான கூடைபந்து போட்டியில் கோவை, மதுரை, தேனி, போடி, செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 18 அணிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இராஜபாளையம் அய்யனார் கோயில் ரோடு ஆனந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராஜீக்கள் கல்லூாயில் உள்ள இரண்டுஆடுகளங்களில் போட்டிகள் நடைபெறகின்றன.முன்னாள் இந்திய கூடை பந்தாட்ட வீரர் ராமசுப்பிரமணிய ராஜா நேற்று போட்டியை துவக்கி வைத்தார். சந்திர ராஜா.தலைமை வகித்தார். டிசம்பர் 29ம் தேதி நடைபெறும் அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.31,000தொகையுடன் டிராபி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை இராஜபளையம் சிட்டிபேஸ்கட் பால் தலைவர் ராம்குமார் ராஜா, செயலாளர் பீமானந்த் பொருளாளர் ராம்சிங் ராஜா செய்துள்ளனர்.
0
Leave a Reply