ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 18 அடி கொள்ளளவு கொண்ட நகராட்சி நீர்த் தேக்கம் நிறைந்து இரண்டாவது நீர்த்தேக்கம் 13 அடியை எட்டி உள்ளதால் மக்கள் சுற்றுபகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று முன்தினம் மதியம் முதல் தொடர்ந்து மழை பெய்து வந்ததை அடுத்து நீராவி, முள்ளிக்கடவு ஆறு, மாவரசி அம்மன் கோவில், மலட்டாறு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.பாதுகாப்பு கருதி, திருக்கார்த்திகைக்கு ஆற்றில் குளிக்க குவிந்த மக்களுக்கு வனத் துறையினர் தடை விதித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம், செண்பகத் தோப்பு, சாலியன் தோப்பு, இடையன்குளம் குட்ட தட்டி, திருவண்ணா மலை, பந்தப்பாறை, பிள்ளையார் குளம், தொட்டியபட்டி போன்ற பகுதிகளில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.மார்கழி, தை மாதங்களில் பனங்கிழங்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும். இந்தாண்டு நல்ல விளைச்சல் உள்ளது. தற்போது பனங்கிழங்குகள் எடுக்கப்பட்டு கொட்டை கிழங்குகள் 25 கொண்டகட்டு ரூ.150-க்கும் விற்கப்படுகிறது. மற்ற கிழங்குகள் 25 கொண்ட கட்டு ரூ.100-க்கும் விற்கப்படுகிறது என பனங்கிழங்கு வியாபாரிகள் தெரிவித்தனர்.நகரில் பல்வேறு பகுதிகளிலும் பனங்கிழங்குகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். பனங்கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
டிச.6ல் தொடங்கி நான்கு நாட்கள் காலை மாலை அபிஷேகம், அலங்காரம் நடந்தது.நேற்று காலை திருக்கல்யாணத்தை முன்னிட்டு பத்மாவதி தாயார், வேட்டை வெங்கடேச பெருமாள் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. தாயார், சுவாமி கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.. ராஜபாளையம் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி லட்சார்ச்சனை,தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை பரம்பரை அர்ச்சகர், அறங்காவலர் முரளி வெங்கட்ராமன் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.அன்னதானம் நடந்தது
ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம்11.12.2024 ,கார்த்திகை மாதம் ஏகாதசி திதி நாளன்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜீனனை நிமித்தமாகக் கொண்டு ஸகல ஜீவர்களும் பயன்பெறும் வகையில் வேதாந்த ஸாரத்தை ஸ்ரீமத் பகவத்கீதையாக உபதேசிக்கப்பட்ட நன்னாள். அன்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்க்கு பிரியமான ஸ்ரீமத் பகவத்கீதையை அனைவரும் இணைந்து பாராயணம் செய்து இறையருள் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்.இடம்:ஸ்ரீமதி P.S.K.ருக்மணியம்மாள் அரங்கம் (காந்தி கலைமன்றம் வளாகம்)நிகழ்ச்சி நிரல்மாலை 4.00 மணிக்குஸ்ரீமத் பகவத்கீதை பாராயணம் ஆரம்பம்மாலை 7.00 மணிக்குதீபாராதனை, ப்ரசாதம். இப்படிக்குபி.ஆர். வெங்கட்ராம ராஜாகுறிப்பு: அனைவரும் ஸ்ரீமத் பகவத்கீதை புத்தகம் கொண்டு வரவும்.
ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில், ருக்மணியம்மாள் அரங்கத்தில் தொழிலதிபர் ராமச்சந்திரன் தலைமையில் 'முப்பதும் தப்பாமே' என்ற தலைப்பில் பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கான திருப்பாவை போட்டிகள் பரிசளிப்பு விழா நடந்தது. இம்பீரியல் பேட்டரி பாலசுப்பிரமணியன் முன்னிலை வகிக்க ,சங்கத் தலைவர் அனிதா வரவேற்றார். மாவட்டத்தின் சிவகாசி, விருதுநகர்,ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி பள்ளி கல்லுாரிகளில் இருந்து 250 மாணவர்கள் பங்கேற்றனர்.திருப்பாவை பாடல், ஓவியம், பேச்சுப் போட் டிகள் நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை அகத்தியர் தமிழ் சங்கம் கோதைநாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கினார். தொழில்முனைவோர் சங்கத் தலைவர் அர்ச்சிதா வரவேற்றார். இதில் 18 முதல் 36 வயதிற்கு உட்பட்ட இளம் தொழில் முனைவோர் 120 பேர் பங்கேற்று ஆடைகள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், உணவு, பேக்கரி, கட்டடக்கலை, அழகு பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில் சார்ந்த விற்பனை புதிய வாய்ப்புகள் குறித்து கண்காட்சி நடத்தினர். ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் விஜய் ராஜா, சிவகணேஷ் செய்திருந்தனர். கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.
சென்னை மாகாண முதல்வராக இருந்த பி.எஸ். குமாரசாமிராஜா சுதந்திர போராட்டத்திற்காக, ஆந்திர சிறையில் இருந்த போது, பூபதி ராஜூ மூலம் கூட்டுறவு வங்கி பற்றி அறிந்து ,1924ல் அவரது பெயரிலேயே தொடங்கி 23 வருடம் தலைவராக இருந்து வழி நடத்தினார். தமிழகத்தில் செயல்படும் கூட்டுறவு நகர வங்கிகளில் விவசாய விளை பொருட்களை பாதுகாக்க ரிசர்வ் வங்கியால் சிறப்பு அனுமதி வழங்கப்பட்ட இரண்டு வங்கிகளில் இதுவும் ஒன்று என்று . விருதுநகர் மண்டல இணைப்பதிவாளர் * செந்தில்குமார் வாழ்த்தி பேசுகையில் கூறினார்.வங்கி தலைவர் ராதா கிருஷ்ணராஜா வரவேற்றார். நுாற்றாண்டு விழா மலர் வெளியிடப்பட்டு, பி.எஸ் குமாரசாமி ராஜா உருவப் படம், கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. எம்.எல்.ஏ., தங்கபாண்டியன், நகராட்சி தலைவர் பவித்ரா, துணைப் பதிவாளர் வீரபாண்டி, வங்கி இயக்குனர்கள், ராஜூகள் மகாசபை நான்கு கோட்டை தலைவர்கள், வங்கி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.வங்கி துணைப்பதிவாளர் ஜான் கபிரியேல் நன்றி கூற விழா நடைபெற்றது .
ஆர்.ஆர் நகர் குடியிருப்பு சங்கத்தினர் இணைந்து அரசின் நமக்கு நாமே திட்டத்தின் ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் 53 கேமராக்கள் பொறுத்தப்பட்டது. நகராட்சி கமிஷனர் பவித்ரா திறந்து வைத்தார். தொழில் அதிபர் குவைத் ராஜா தலைமை வகித்தார். கவுன்சிலர் சீனிவாசன் முன்னிலை வகிதார். குடியிருப்பு சங்க தலைவர் ஜெகநாத ராஜா, செயலாளர் அழகர்சாமி ராஜா உள்பட பலர் பங்கேற்றனர். .ராஜபாளையம் நகராட்சி ஆர். ஆர் நகர் குடியிருப்பு, சத்திரப்பட்டி மெயின் ரோட்டில் 9 தெருக்களுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இங்கு கடந்த ஆறு மாதமாக தொடர் திருட்டு கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வந்தது. ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் செலவில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது.
இராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், வனத்துறை, ராம்கோ கம்யூனிட்டி சர்வீசஸ், வார்அமைப்பு, இந்திய வன அறக்கட்டளை சார்பில் மேற்கு தொடர்ச்சி மலையும், மேகமலையும் என்ற தலைப்பில் சுற்றுச்சூழல்பாதுகாப்பு கருத்தரங்கு நடந்தது.ராம்கோ கம்யூனிட்டி சர்வீசஸ் சுற்றுச்சூழல், ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணிய ராஜா வரவேற்றார். தலைமை செயல்பாட்டு அதிகாரி கிரிதரன் வாழ்த்தினார். கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து பேசினார். மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் முன்னிலை வகித்து பேசினார். கிரீன் ப்யூச்சர் பவுன்டேசன் இயக்குனரான ஐஸ்டஸ் ஜோஸ்வா மேற்கு தொடர்ச்சி மலை குஜராத்தில் துவங்கி, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு வரை செல்கிறது. இந்தியாவின் பரப்பில் 5 சதவீதம் உள்ளது. இதில் 51-வது புலிகள் சரணாலயமாக ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 149 வண்ணத்து பூச்சி வகைகளும், 252 பறவை வகைகளும், 63 பாலூட்டி வகைகளும், 100 ஊர்வன வகைகளும், 44 நீர் ,நில வாழ்வனவும், உள்ளன.விலங்குகள் நம்மை விட நுண்ணுணர்வு கொண்டவை. அவை ஒரு போதும் இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தியது இல்லை. இயற்கையை பாதுகாக்க தான் செய்யும், அதே போல் மனிதர்களான நாமும் மலையை பாதுகாக்க வேண்டும் என்றார்.சிவகங்கை பசுமை குழுஉறுப்பினர் மணிவண்ணன் மேற்கு தொடர்ச்சி மலை நமக்கு பல வற் றாத ஜீவ நதிகளை தரு • கிறது. இன்று மதுரையின் வைகையும், விருதுநகர் மாவட்டத்தின் வைப்பா றும் வறண்டு காணப்படுகின்றன. நீர் நிலைகளை காக்க மேற்கு தொடர்ச்சி மலை அவசியம் .இதை பாதுகாத்தால் வைகை, வைப்பாறு நதிகள் புத்துயிர் பெற்று 5 மாவட்டங்களுக்கான குடி நீர் தேவை பூர்த்தி ஆகும், என்றார்.
மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய நீர்வரத்து பகுதிகளை ஒட்டி பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நெல் விவசாயம் நடந்து வருகிறது. நீர் இருப்பை பொறுத்து ஒவ்வொரு பகுதியாக நெல் நடவு பணிகளை இப்பகுதி விவசாயிகள் செய்து வருகின்றனர்.தேவதானம், சாஸ்தா கோவில் ஒட்டிய பகுதிகளில் விவசாய பணிகளை முதலில் தொடங்கியதும், சேத்தூர், அயன் கொல்லங்கொண்டான், முகவூர், இராஜபாளையம் பகுதி விவசாயிகள் கிணற்று நீர் இருப்பு, கண்மாய் நீர் வரத்தை பொறுத்தும், பணிகளை தாமதித்து தொடங்கியுள்ளனர். இந்நிலையில் விவசாய பணிகளுக்கு முன்பு போல் ஆட்கள் கிடைக்காததுடன் கூலியும், அதிகரித்து வருகிறது. இதற்கு மாற்றாக இயந்திரம் நடவுக்கு பரவலாக பலரும் மாறி வருகின்றனர்