25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


சமீபத்திய நிகழ்வுகள்

Feb 27, 2025

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை, மேக மலை புலிகள் காப்பகத்தில்எண்ணிக்கை அதிகரித்துள்ள சாம்பல் நிற அணில்கள்

இப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. யானை, புலி, சிறுத்தை காட்டு எருமை, காட்டு பன் றிகள், மான் என ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன. அதேபோல இங்கு சாம் பல் நிற அணில்களும் உள்ளன. இப்பகுதி முன்பு சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் என அழைக்கப்பட்டும்  இப்பகுதியில் சாம்பல் நிற அணில்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் இருப்பதாலும், உணவுகள் கிடைப்பதாலும் இந்த அணில்கள் இங்கு மட்டுமே காணப்படும். இந்த அரிய வகை சாம்பல் நிற அணில்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. ஆண்டுதோறும் சாம்பல் நிற அணில்கள் கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தற்போது 2 நாட்கள் 41 பீட்டுகளில் கணக்கெடுப்பு பணி நடந்தது. இந்த கணக்கெடுப் பின்போது சாம்பல் நிற அணில்களின் எண்ணிக்கை அதிக அளவு உயர்ந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Feb 24, 2025

ராஜபாளையம் முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு ரோட்டில் செக்போஸ்ட் திறப்பு. 

ராஜபாளையம் மேற்கு பகுதியான முடங்கியார் ரோடு செண்பகத்தோப்பு ரோட்டில் ஆறுகள், வனப்ப குதி உள்ளன. இதிலிருந்து நகர்பகுதி தாலுகா அலுவலகம் வரை ஏராளமான குடியிருப்புகள் விவசாய நிலங்கள் அமைந்துள்ளது.இந்நிலையில் இங்கு அடிக்கடி நடைபெறும் வழிப்பறி, தகராறு, மண் கடத்தல் உள்ளிட்ட குற்ற செயல்களை தடுக்கும் விதமாக போலீஸ் செக்போஸ்ட் அமைத்து கண்காணிக்க வேண்டும் என குடி யிருப்பு நல சங்கத்தினர் பல்வேறு சமுதாயத்தினர் கோரிக்கை விடுத்தனர்.இதனை அடுத்து இப்பகுதியை கண்காணிக்கும் வகையில் போலீஸ் செக் போஸ்ட் கூண்டினை டி.எஸ்.பி., ப்ரீத்தி ரிப்பன் வெட்டி துவக்கினார். 

Feb 21, 2025

மேற்கு தொடர்ச்சி மலையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் மலையேற்றம் செல்வதை ஏப்ரல் 15 வரை நிறுத்தி வைக்க அரசு அறிவுறுத்தி உள்ளன.  

 2024 நவம்பர் முதல் மேகமலை புலிகள் காப்பகத்தின் ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பு முதல் வ.புதுப்பட்டி வரை கிலோமீட்டர் 9 துாரம் வனத்துறையினர் மூலம் மலையேற்றம் அழைத்துச் செல்லும் திட்டம் துவங்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி பல்வேறு வெளிமாவட்ட மக்களும் இணைய தளம் மூலம் முன்பதிவு செய்து மலையேற்றம் சென்று வந்தனர்.இந்நிலையில் தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் மலையில் அதிகரிக்கதுவங்கியுள்ளதால் மாநிலம் முழுவதும் மலையேற்றம் செல்வதை ஏப்ரல் 15 வரை நிறுத்தி வைக்க அரசு அறிவுறுத்தி உள்ளன. 

Feb 06, 2025

அரசு பஸ்களில் ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின்செண்பகத் தோப்பில் உள்ள சாம்பல் நிற அணில்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த அதன் ஓவியங்கள்வரையப்பட்டுள்ளது

 .மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் இயற்கை, வனம், வனவிலங்குகள் குறித்து விழிப்புணர்வை மக்களி டம் கொண்டு செல்வதில்பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.மதுரையில் இருந்து செங்கோட்டை வழித்தடத்தில் இயங்கும். அரசுபஸ் முழுக்கசாம்பல்நிறஅணில்குறித்தஓவியங்கள்சாம்பல்நிறஅணில்கள்குறித்தவிழிப்புணர்வைபஸ்பயணிக்கும்வழித்தடநகரங்களைசேர்ந்தமக்களிடம்ஏற்படுத்தவரையப்பட்டுள்ளது.அரசு பஸ்களில் பல்வேறு வணிக நிறுவனங்களின் விளம்பரங்களைபார்த்த மக்களுக்கு, தற்போது சாம்பல் நிற அணில்களின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதை   வரவேற்க்கின்றனர்.

Jan 23, 2025

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி இயற்கை கழகம் இணைந்து விழிப்புணர்வு கலை பயணம் துவக்க விழா.

ராஜபாளையம் வனத்துறை நீலகிரி வரையாடு திட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகம், ராஜபாளையம் ராஜூக் கள் கல்லுாரி இயற்கை கழகம் இணைந்து விழிப்புணர்வு கலை பயணம் துவக்க விழா நடந்தது. புலிகள் காப்பக துணை இயக்குனர் வரவேற்றார். தேவராஜன்கலெக்டர் ஜெயசீலன் பேசுகையில், விவசாயிகளுக்கு வன விலங்குகளால் பல்வேறு பிரசனைகள் ஏற்படுகிறது. மயில்கள், காட்டு பன்றிகள், மான்கள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது . நகர் பகுதியில் நாய்களின் தொல்லைகளும் அதிகமாகிறது. மான்களின் இனப்பெருக்கம் அதிகரித்து உணவுக்காக வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது அதி கரித்துள்ளது.இதற்கு காரணம் இயற்கை சமநிலை மாறி வருவது ஆகும். மான்கள் இனப்பெருக்கம் பெரிய அளவில் நடைபெற்று வருவதற்கு காரணம் புலிகள் எண்ணிக்கை குறைந்து  வருவதுதான். புலிகளை பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் அரசு, வனத்துறை சார்பில் இயற்றப் பட்டுள்ளது.  

Jan 10, 2025

செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம்.

 குற்ற செயல்கள்அதிகம் உள்ள ராஜபாளையம் நகர் மேற்கே குடியிருப்புகள் பகுதிகளில் குற்ற செயல்களை கண்காணிக்க போலீஸ் செக் போஸ்ட் . ராஜபாளையம் மேற்கு பகுதியான செண்பகத்தோப்பு ரோடு, முடங்கியார் ரோட்டில் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், ஆறு, வனப்பகுதி அமைந்துள்ளன.  சட்ட விரோத செயல்கள் அடிக்கடி நடைபெற்று வந்த இப்பகுதிகளில் வழிப்பறி, திருட்டு, மறியல், வனப் பகுதியில் இருந்து வன விலங்குகள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தல் நடைபெற்று வந்தன.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரச்னைகளை சரி செய்யவும், போக்குவரத்தை சீராக்கவும் காலதாமதம் ஆனது.முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு ரோடு பிரிவு பகுதியில் செக்போஸ்ட் அமைத்து கண்காணிக்க, செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் போலீஸ் செக்போஸ்ட் கூண்டு வைக்கப் பட்டுள்ளது, விரைவில் போலீசார் கண்காணிப்பு  பணி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Jan 09, 2025

ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான  ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி 

ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான  ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி நடந்ததுமாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மலர், ஐ.எஸ்.டி.இ தமிழ்நாடு செயலாளர் சவுரிராஜன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.65 ஆயிரம் மதிப்பிலான பரிசு தொகை சான்றிதழ்கள் வழங்கினர்.முதல்வர் கணேசன் தலைமை வகித்தார். துணை முதல்வர் ராஜ கருணாகரன், கணிதத் துறை தலைவர் பசரிகொடி, பொது மேலாளர் செல்வராஜ் துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.விருதுநகர் தென்காசி மாவட்டங்களை சேர்த்த 51 பள்ளிகளில் இருந்து 1380 பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பங்கேற்றனர்.பேராசிரியர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

Jan 05, 2025

ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு .

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் ஆற்றுப்பகுதியில் உள்ள நீராவி, முள்ளிக்கடவு, மாவரசி அம்மன் கோவில் உள்ளிட்ட பிட்டுகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மலையடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் தற்போது தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 6-வது மைல் குடி நீர் தேக்கம் நிரம்பியது. அதே போல 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணை யாளர் நாகராஜன் உத்தரவின் பேரில் நகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையில் மழைபெய்து வருவதால் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். குடிநீர் இந்த ஆண்டு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நகராட்சி நிர் வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Dec 30, 2024

ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் .

 நகராட்சிதலைவர் பவித்ரா ஷியாம் தலைமையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் கல்பனா, ஆணையாளர் நாகராஜன், செயற்பொறியாளர் முகமது செரிப் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு இரங்கல்  தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பாதாள சாக்கடை இணைப்புக்கான வாய்ப்புத்தொகை மற்றும் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தலைவர் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.கவுன்சிலர்கள் அதிக கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்துள்ளதாக மக்களிடம் தவறான தகவல் பரவுகிறது.. மேலும் சொத்து வரியை ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்த்துவதால் பொதுமக்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 

Dec 18, 2024

ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி உள்ள ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் பகுதிகளில் நெல், கரும்பு விவசாயமும் நடப்பதாலும், இந்தாண்டு பெய்துள்ள மழை விவசாயத்திற்கு உதவியுள்ளது .ஆனால் இந்தாண்டு நவம்பரில் 82.3 மி.மீ., பதிவானது. 2018ல் 81.37 மி.மீ., மழையளவு பதிவாகி உள்ளது.தமிழகத்தில் நேற்று வேறு எந்த பகுதியில் பெரிய அளவில் கன மழை இல்லாத சூழலில் அதிகபட்சமாக ராஜபாளையத்தில்9.2செ.மீ.,மழையளவு பதிவானதாக பேரிடர் மேலாண்மை துறையினர் தெரிவித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில்7.2 செ.மீ., மழையும், வத்திராயிருப்பில் 5.1 செ.மீ., மழையும் பதிவானது. 

1 2 ... 10 11 12 13 14 15 16 ... 20 21

AD's



More News