25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


உலகிலேயே அதிக ஆயுட்காலம் கொண்டவர்கள் ஜப்பானியர்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகிலேயே அதிக ஆயுட்காலம் கொண்டவர்கள் ஜப்பானியர்கள்.

.'நம்மில் பெரும்பாலோர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ விரும்புகிறோம். ஆனால், தவறான உணவுப் பழக்கம், மன அழுத்தம், மாசு போன்றவற்றால்60 வயதை எட்டும் முன்பே பலர் இறந்துவிடுகிறார்கள். உலக சுகாதார புள்ளி விவரப்படி இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம்69.16 ஆண்டுகள். உலகிலேயே அதிக ஆயுட்காலம் கொண்டவர்கள் ஜப்பானியயர்கள் .ஜப்பானைச் சேர்ந்த ஒருவர்112 வயது344 நாட்களில் உலகின் அதிக காலம் வாழ்ந்தவர் என்ற கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார். ஜப்பானில் உள்ள மக்களின் சராசரி ஆயுட்காலம்83.7 ஆண்டுகள். பெண்களுக்கு86.8வயதும்,ஆண்களுக்கு80.5வயதும்ஆகும்.ஜப்பானியர்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், உடற் பயிற்சி கலாச்சாரம், மரபியல் போன்றவை இதற்கு முக்கியக் காரணங்கள்.சரியான அளவில் உணவை உண்ண வேண்டும். வயிறு80 சதவீதம் நிரம்பும் வரை மட்டும் சாப்பிட்டால் நீண்ட காலம் வாழலாம் என்று அங்குள்ளவர்கள் நம்புகிறார்கள். எனவே, அதிக உணவை உட்கொள்வதை நிறுத்த வேண்டும். தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது வயிற்றின் சுமையைஅதிகரிக்கிறது. 

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.  ஜப்பானியர்கள் அதிக அளவிலான தூய்மையைப் பின்பற்றுகிறார்கள். இதமான சமநிலைமற்றும் பருவகால பூக்கள் நிறைந்த பூங்காக்கள் மக்களை நீண்ட காலம் வாழ வைக்கிறது உணவு நேரம்: ஜப்பானியர்கள் மெதுவாக சாப்பிடும் முறையை ஊக்குவிக்கிறார்கள். ஒரே தட்டில் சாப்பிடுவதை விட சிறிய தட்டுகள் அல்லது கிண்ணங்களில் சாப்பிடுவது,.'குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளனர் .சாப்பிடும்போது டிவி பார்ப்பதையும் செல்போன் பயன்படுத்துவதையும் தவிர்க்கின்றனர் குறிப்பாக தரையில் அமர்ந்து சாப்பிடுவதை பின்பற்றுகின்றனர்

உணவு முறை: ஜப்பானியர்கள் சமச்சீரான உணவை உண்கின்றனர். பழங்கள், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன், அரிசி, முழு தானியங்கள், டோஃபு, சோயா, மிசோ மற்றும் ம் பச்சை காய்கறிகள் அதிகம் உட்கொள்கின்றனர். இந்த அனைத்து உணவுகளிலும் குறைந்த அளவு கொழுப்புகள் மற்றும் சர்க்கரை உள்ளன. அவை வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. இதனால், புற்றுநோய் மற்றும் இதய நோய்களில் இருந்து விடுபடுவதும் ஜப்பானில் உடல் பருமன் விகிதம் மிகவும் குறைவாக இருப்பதற்கு இந்த டயட் தான் காரணம்.ஜப்பானியர்களிடையே தேநீர் மிகவும் பிரபலமானது. தேநீர் தயாரிக்கப் பயன்படும் தேயிலை இலைகளில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்றுநோயைஎதிர்த்துபோராடும். நடைபயிற்சிக்குஜப்பானியர்கள் உட்கார்ந்த வாழ்க்கை முறையை தவிர்க்கிறார்கள்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நடக்க விரும்புவார்கள். நாற்காலிகள் மற்றும் சோஃபாக்களை விட தரையில் உட்காருவது. மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் அருகிலுள்ள ரயில் நிலையத்திற்கு நடந்து அல்லது சைக்கிளில் செல்கின்றனர். இவை அனைத்தும் அவர்களின் ஆயுளை அதிகரிக்க உதவுகின்றன.

முதியோர் பராமரிப்பு: மற்ற நாடுகளைப் போலல்லாமல், ஜப்பானியர்கள் தங்கள் வயதான குடும்ப உறுப்பினர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவதில்லை. குடும்ப உறுப்பினர்களை கவனிப்பது அவர்களின் பாரம்பரியம். முதுமையில் குடும்பத்துடன் வாழ்வது உளவியல் ரீதியாக பல நன்மைகளைத் தருவதாகவும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்றும் நம்புகிறார்கள்.மகிழ்ச்சியுடன் வாழ்வது: ஜப்பானியர்கள்'இகிகை' கொள்கையின்படி வாழ்கின்றனர்,, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அன்பாக நேரத்தை செலவிடுவது அவர்களின் ஆயுட்காலத்தை இரட்டிப்பாக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News