விலை வீழ்ச்சியை நோக்கி தக்காளி
இராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த ஆண்டு கோடை பருவத்தில் கிணற்று நீரை பயன்படுத்தி தக்காளி சாகுபடி அதிகரித்துள்ளது. குறிப்பாக கலங்காபேரி, புதூர், அய்யனாபுரம், சிவலிங்காபுரம், வடகரை, கிழவிகுளம், சங்கரலிங்காபுரம், கிருஷ்ணாபுரம், நல்லமநாயக்கர்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த பிப்ரவரி நடவு செய்யப்பட்ட தக்காளி பயிர்கள் தற்போது வெயில் சீசனில் ,காய்த்து மகசூல் அதிகரிக்கிறது. இதனால் கடந்த சில நாட்களாக இராஜபாளையம் மார்க்கெட்டிற்கு அதிகப்படியான வரத்தினால் ,கடந்த மாதம் ரூபாய் 25 வரை விற்ற தக்காளி தற்போது, படிப்படியாக குறைந்து கிலோ 9 வரை விலை போனது. இதைவிட ரூபாய் 2 க்கு குறையும் நிலைக்கு வந்து ,தற்போது சுற்றிலும் பங்குனி திருவிழா தொடங்கி நடைபெற்று வருவதால், இந்த நிலையில் நிற்கிறது. இது தவிர ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி மார்க்கெட்டில் இருந்தும் தக்காளி இங்கு கொண்டு வரப்படுகிறது. இராஜபாளையத்தில் தக்காளி வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் ஒரு கிலோ ரூபாய் 9 வரை விற்பனை ஆகிறது. இதே நிலை நீடித்தால் மேலும் குறைய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
0
Leave a Reply