தாய்மை அமைப்பு மூலம் மாணவர்களுக்கு பல்வேறு செயல்பாடுகள்
வாணி சரஸ்வதி வாசகர் வட்டம். இராஜபாளையம். தமிழகத்தில் செயல் படும் ஒரே ஒரு பெண்கள் மற்றும் சிறுவர்கள் நூலகத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறு காலையில் நடைபெறும். பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு பேச்சுப் பயிற்சி தரப்படுகிறது. தரப்படும் தலைப்பில் மாணவர்கள் தத்தம் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப் படுகிறது. பட்டி மன்றம் போன்ற சுவையான நிகழ்வுகளும் உண்டு. பலதுறை அறிஞர்கள் வந்து உரையாற்றி கேட்போரின் அறிவுத்திறன் மேம்படுத்த வழிகாட்டி வருகின்றனர்.
தாய்மை அமைப்பு மூலம் மாணவர்களுக்கு உலகளாவிய ரீதியில் பல்வேறு செயல்பாடுகள் அறிமுகப்படுத்தப் படுகிறது. உதாரணமாக நேரவங்கி (Time bank) மனித நூலகம் (Human library) போன்றவை. தற்போது மாணவர்கள் ஆன்லைன் புலன இதழ் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிர் காலத்தில் சிலம்பம் போன்ற கலைகள் கற்றுத்தரவும் திட்டங்கள் உள்ளன.
0
Leave a Reply