25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


சமீபத்திய நிகழ்வுகள்

Jul 04, 2024

இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம்

இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் நகராட்சி குடிநீர் தேக்கம் பின்புறம் யானைகள் புகுந்து மாமரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த சில நாட்களாக வன பகுதியில் இருந்து வரும் யானை கூட்டம், மா மரங்களை தொடர்ந்து ஒடித்து சேதப்படுத்தி வருகிறது. ஏற்கனவே இப்பகுதியில் மாம்பழ விளைச்சல் ஏமாற்றியுள்ள நிலையில், மாமரங்களை யானைகள் அழித்து வருவது விவசாயிகளை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

May 30, 2024

சாஸ்தா கோவில் அணை நீர்மட்டம் உயர்வு

 ராஜபாளையத்தை அடுத்து தேவதானம் அருகே சாஸ்தா கோவில் அணை அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் நகரியாறு தண்ணீரை கொண்டு அடிவாரத்தில் சாஸ்தா கோவில் அணை 36 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.இந்த அணையில் நீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாய பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. தேவதானம், கோவிலூர், சேத்தூர், சொக்கநாதன் புத்தூர், தளவாய்புரம் ஆகிய பகுதிகளில் அமைந் துள்ள பெரியகுளம், நகர குளம், வாண்டையார் குளம், முகவூர் கண்மாய் வரை 20-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு சாஸ்தா கோவில் அணையின் நீர் தேவைக்கு ஏற்ப திறந்து விடப்படும்.தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக அணையில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

May 28, 2024

ராஜபாளையத்தில் ரயில்வே மின் பணிமனை துவக்கம்

மதுரை கோட்டம் ரயில்வே நிர்வாகம் 'மதுரை கோட்டத்தில்12வது  ரயில் மின்தட பராமரிப்பு பணி மனை  ராஜபாளையத்தில் துவக்கப்பட்டுள்ளது' என  தெரிவித்துள்ளது. விருதுநகர் - தென்காசி பிரிவில் மின்சார இன்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த தடத்தில் மின்சார பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், திடீர் பழுதுகளை நீக்கவும் ராஜபாளையத்தில் கடந்த மே 24 ல் ரூ 1.5 கோடி செலவில் பணிமனை உருவாக்கி, துவக்கி வைக்கப்பட்டது. இந்தப் பாதையில் ஏற்படும் பிரச்னைகளை உடனுக்குடன் சரிசெய்யும் வகையில் பராமரிப்பு ரயில் பெட்டி ஒன்று நவீன உபகரணங்களுடன் எந்நேரமும் தயார் நிலையில் இருக்கும்.

May 23, 2024

ராஜபாளையம் அருகே தேவதானத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம், கோவிலூர், சேத்தூர் பகுதியில் உள்ள விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் என்றுகோரிக்கை விடுத்தனர்.  இதுதொடர்பாக மக்களின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவின்பேரில் கொள்முதல் நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் விவசாயிகள் முன்னிலையில்தேவதானத்தில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் 300 நெல் மூடைகள், கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையம் மூலம் தேவதானம், கோவிலூர் மற்றும் அதன் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்துநெல்கொள்முதல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்தஅதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

May 22, 2024

ஆறாவது மைல் நீர்தேக்கம் 17 அடியை எட்டியது.

இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்மழை காரணமாக ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இராஜபாளையம் நகராட்சி குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் ஆறாவது மைல் நீர்த்தேக்கம் மலைப்பகுதியில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் 17 அடியை எட்டி உள்ளது. இதனால் நகராட்சி நிர்வாகத்தினர், மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

May 07, 2024

பிளஸ் 2 தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் 96.64 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 397 அரசு பள்ளிகள் முழு தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழகத்தில் 97.45 சதவீதம் தேர்ச்சி பெற்று ,திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. மாணவர்களில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 96.44 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.விருதுநகர் மாவட்டத்தில் 96.64 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Apr 25, 2024

யார் மண்ணை அப்புறப்படுத்துவார்கள்.

இராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் இடித்து அகற்றப்பட்டு புதிய கட்டுமான பணிகள் 15 மாதங்களாக நடந்து வருகிறது. இதற்காக அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரே திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் தற்காலிக பஸ் ஸ்டாப் இயங்கி வருகிறது.பயணிகள் வெயில், மழையில் இருந்து ஒதுங்க தற்காலிக கூரை அமைக்கப்பட்டது. அவை மழை வெயிலில் ஒதுங்க போதிய அளவு இல்லை. தற்போது கான்கிரீட் தூண்களுடன் அமைத்து பஸ்ஸ்டாப் கட்டுமானத்திற்கு பணிகள் தொடங்கின. பணிகளை முடிக்க எதிர்பார்க்கும் சூழலில் கிடப்பில் போட்டுள்ளதோடு, இதற்காக அள்ளப்பட்ட மண் மெயின் ரோட்டில் பஸ் ஸ்டாப் முன்பு இடையூறாக குவித்து வைத்துள்ளனர்.ஏற்கனவே இடம் இன்றி ரோட்டை அடைத்து பஸ்கள் ஆக்கிரமிக்கும் நிலையில், குவிந்துள்ள மண்ணும் தடையாக மாறியதால் கர்ப்பிணிகள், மாணவிகள், பெண்கள், பஸ் நிற்கும் போது மண் குவியலை கடந்து செல்ல சறுக்கி விழுவதுடன் இடம் இன்றிதவிக்கின்றனர்.

Apr 23, 2024

மாரியம்மன் கோவில் பூமிதி விழா

23 ஏப்ரல்  இராஜபாளையம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா வெகு சிறப்பாக நாட பெற்றது. 5000த்திற்கும் மேற்பட்ட  பக்தர்கள் பூ இறங்கினார்கள்  மக்களும் பொறுப்புடன் இடித்துக் கொள்ளாமல், பொறுமையாகச்  சென்றதால் பூமிதி விழா அமைதி யாக நடைபெற்றது.

Apr 21, 2024

இராஜபாளையம் வேட்டைபெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா

வேட்டைபெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நம் நகரில் நடந்தது. ஆகம விதிப்படி 3 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 7.45 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். ராம்கோ சேர்மன் திரு.பி.ஆர். வெங்கடராமராஜா குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

Apr 12, 2024

நம் நகரில் மழை வரத்தால் விவசாயிகள் குளிர்ந்தனர்.

.தொடர் வெப்பக்காற்று வீசிய நிலையில், கன மழையால் நம் நகரில் குளிர்ந்த சூழல் நிலவியது. இந்நிலையில் மதியம் 12.00 மணி முதலே  ,வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. நேற்று மதியம் 3.00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேல் கனமழை பெய்ய துவங்கியது. இராஜபாளையம் நகர்ப்புறங்களில் பல இடங்களில் மழைநீர் தேங்கி பின் வடிந்தது.

1 2 ... 13 14 15 16 17 18 19 20 21 22

AD's



More News