அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோவில் கொடியேற்ற வைபவம்
ராஜபாளையத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க திரெளபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் திருவிழா நடைபெற்று 13ஆம் தேதி பூக்குழி திருவிழா நடைபெற உள்ளது. கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடத்தி ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த கோவிலில் அருள்மிகு திரெளபதி அம்மன், ஸ்ரீ தர்மர், ஸ்ரீ பீமன், ஸ்ரீ அர்ஜுனன், ஸ்ரீ நகுலன் ஸ்ரீ சகாதேவன், பகவான் ஸ்ரீ கண்ணன் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
2024 ஆம் வருடம் பங்குனி மாதம் நடைபெற உள்ள திருவிழாக்கள் வைபவங்கள் விபரம்.நாள் கால் வைபவம்
2024ம் வருடம் 20.03.2024 பங்குனி மாதம் 7ம் தேதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் நாள்கால் பூஜை செய்து வேலைகள் ஆரம்பிக்கும் வைபவம்.
கொடியேற்றம் வைபவம்
2024ம் வருடம் 03.04.2024 பங்குனி மாதம் 21 ம் தேதி புதன்கிழமை காலை 09.00 மணிக்கு மேல் 11.00 மணிக்குள் அம்மன் கொடியேற்றம் நடத்தும் வைபவம்.
அக்னிபிரவேச, பூக்குழி வைபவம்
2024ம் வருடம் 13.04.2024 பங்குனி மாதம் 31 ம் தேதி சனிக்கிழமை காலை 7.05 மணிக்கு மேல் 09.00 மணிக்குள் அக்னி பூஜைகள் ஆரம்பம்.
அன்று மாலை 4.00 மணிக்கு மேல் 5.25 மணிக்குள் அம்மன் வீதி உலா வந்து பூக்குழி வைபவம்.
2024ம் வருடம் 14.04.2024 சித்திரை மாதம் 01 ம் தேதி ஞாயிறுக்கிழமை மாலை 3.00 மணிக்கு மேல் 04.25 மணிக்குள் அம்மன் வீதி உலா மற்றும் மஞ்சள் நீராட்டு வைபவம்.
மேலே கண்ட அனைத்து வைபவங்களிலும் அனைத்து திருவிழாக்களிலும் அனைவரும் கலந்து கொண்டு திருவிழா நன்கு நடைபெற ஒத்துழைப்பு கொடுத்து அம்மன் திருவருள் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைவர்,
அருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோவில் இராஜபாளையம்
0
Leave a Reply