கடுமையான வெயில் நேரம், இதை மட்டும் சாப்பிடாதீங்க...
புளிப்பு, காரம் அதிகம் சேர்க்கப்படும் புளிக்குழம்பு, காரக்குழம்பு வகைகளைதவிர்ப்பது நல்லது. உடல்சூட்டையும். பித்தத்தையும் அதிகரிக்கும் என்பதால்வெயில் காலத்தில் தவிர்ப்பது நல்லது.
காரமான உணவுகள் தொடர்ந்து சாப்பிட்டால் உடல் சூட்டால் நீர்க்கடுப்பு, நீரில் இரத்தம் வெளியேறுதல் பிரச்சினைகள் ஏற்படலாம்.
எண்ணெய் பலகாரங்கள், தேநீர் வெயில் நேரத்தில் பித்தத்தை ஏற்படுத்தும். அதனால் அவற்றை முடிந்தளவு அதிகமான வெயில் இருக்கும் சமயங்களில் தவிர்ப்பது நல்லது.
அதிக காரமான பச்சை மிளகாய், மிளகு, மசாலா சேர்த்த உணவுகள் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. மேலும் இது ஆசனவாயில் எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும்,
கடைகளில் விற்கும் பரோட்டா போன்ற மைதா உணவுகள், ஃபாஸ்ட்புட வகைகளை தவிர்ப்பது நல்லது.
0
Leave a Reply