யார் மண்ணை அப்புறப்படுத்துவார்கள்.
இராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் இடித்து அகற்றப்பட்டு புதிய கட்டுமான பணிகள் 15 மாதங்களாக நடந்து வருகிறது. இதற்காக அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரே திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் தற்காலிக பஸ் ஸ்டாப் இயங்கி வருகிறது.
பயணிகள் வெயில், மழையில் இருந்து ஒதுங்க தற்காலிக கூரை அமைக்கப்பட்டது. அவை மழை வெயிலில் ஒதுங்க போதிய அளவு இல்லை. தற்போது கான்கிரீட் தூண்களுடன் அமைத்து பஸ்ஸ்டாப் கட்டுமானத்திற்கு பணிகள் தொடங்கின.
பணிகளை முடிக்க எதிர்பார்க்கும் சூழலில் கிடப்பில் போட்டுள்ளதோடு, இதற்காக அள்ளப்பட்ட மண் மெயின் ரோட்டில் பஸ் ஸ்டாப் முன்பு இடையூறாக குவித்து வைத்துள்ளனர்.
ஏற்கனவே இடம் இன்றி ரோட்டை அடைத்து பஸ்கள் ஆக்கிரமிக்கும் நிலையில், குவிந்துள்ள மண்ணும் தடையாக மாறியதால் கர்ப்பிணிகள், மாணவிகள், பெண்கள், பஸ் நிற்கும் போது மண் குவியலை கடந்து செல்ல சறுக்கி விழுவதுடன் இடம் இன்றி
தவிக்கின்றனர்.
0
Leave a Reply