தோசை சுடுவதற்கு முன்…
சாதா தோசை கல்லில் தோசை சுடும் போது தோசை சுடுவதற்கு முன் சிறிதளவு எண்ணெயும் உப்பும் கலந்து தேய்த்து கழுவி
பிறகு தோசை சுட்டால் தோசை நன்றாக வரும் என்னையும் அதிகமாகதேவைப்படாது.
தேங்காய் துருவலுடன் ஊற வைத்து அரைத்த வேர்க்கடலை சேர்த்து தேங்காய் பர்பி செய்தால் பர்பி சுவையாக இருக்கும்.
முள்ளங்கி சாம்பார் செய்யும் பொழுது முள்ளங்கியை எண்ணெய்யில் வதக்கி விட்டு பின்பு சாம்பாரில் சேர்த்தால் முள்ளங்கியின் சுவை அருமையாக இருக்கும்.
மோர் குழம்பு செய்து இறக்கும் பொழுது சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற் ஊற்றி இறக்கினால் குழம்பு ருசியாக இருக்கும்.
பருப்பு வேகவைக்கும் பொழுது சிறிதளவு நெய் ஊற்றி வேக வைத்தால் பருப்பு விரைவில் வேகும், குழம்பில் தனி ருசி கூடும்.
0
Leave a Reply