சாஸ்தா கோவில் அணை நீர்மட்டம் உயர்வு
ராஜபாளையத்தை அடுத்து தேவதானம் அருகே சாஸ்தா கோவில் அணை அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் நகரியாறு தண்ணீரை கொண்டு அடிவாரத்தில் சாஸ்தா கோவில் அணை 36 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.
இந்த அணையில் நீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாய பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. தேவதானம், கோவிலூர், சேத்தூர், சொக்கநாதன் புத்தூர், தளவாய்புரம் ஆகிய பகுதிகளில் அமைந் துள்ள பெரியகுளம், நகர குளம், வாண்டையார் குளம், முகவூர் கண்மாய் வரை 20-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு சாஸ்தா கோவில் அணையின் நீர் தேவைக்கு ஏற்ப திறந்து விடப்படும்.தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக அணையில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
0
Leave a Reply