தனியார் கரும்பு ஆலையை நிலுவைத் தொகை முழுவதும் வழங்கிய பின், ஆலையை திறக்க கரும்பு விவசாயிகள் கோரிக்கை
இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம், தேவதானம், பகுதிகளில் நீர் வரத்து காரணமாக கரும்பு சாகுபடி அதிகம். எனவே இங்கு சாகுபடியாகும் கரும்புகளை விருதுநகர். தென்காசி மாவட்ட எல்லையில் செயல்பட்ட தனியார் கரும்பு ஆலைக்கு ஒப்பந்த முறையில் வழங்கி வந்தனர்.
இந்நிலையில் விவசாயிகளின் 2018 2019 ம் ஆண்டிற்கான கரும்பு அனுப்பியதில் வட்டியுடன் நிலுவைத் தொகை ரூ.30 கோடி இதுவரை நிலுவையில் இருந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் ஆலை நிர்வாகம் சார்பில் விவசாய பிரதிநிதிகளை அழைத்து அசல் தொகையான ரூ.21 கோடியில் பாதியை விவசாயிகள் கணக்கில் செலுத்தியுள்ளனர்.
மீதமுள்ள தொகையை தவனை முறையில் செலுத்துவதாக கூறியதை அடுத்து அடுத்த வருடத்திற்கான ஆலை திறப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அசல் தொகை முழுவதையும் விவசாயிகளிடம் வழங்கிய பின் ஆலையை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
0
Leave a Reply