25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


வெள்ளித்திரை

Feb 12, 2026

இயக்குனர் ஷங்கருக்கு அமெரிக்க விசா கிடைக்க உதவிய பாடல்:

படத்தில் ஒரு பாடலை தவிர அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருந்தார். அந்த ஒரு பாடலை வாலி எழுதியிருந்தார். ஆனால் அந்த ஒரு பாடல் தான் இயக்குனர் ஷங்கருக்கு அமெரிக்கா செல்வதற்கான விசாவை பெற்று கொடுத்துள்ளது என்றால் நம்ப முடிகிறது. இதுதான் உண்மை. இது குறித்து பேசிய ஷங்கர், அமெரிக்கா செல்வதற்காக விசா நேர்காணலுக்குச் சென்றுள்ளார். அமெரிக்கன் எம்பெஸியில், ஒரு அமெரிக்கப் பெண் அதிகாரி அவரிடம் நீண்ட நேரமாக விசாரணை நடத்தியுள்ளார். நீங்கள் யார்? எதற்காக அமெரிக்கா செல்கிறீர்கள்? உங்கள்பின்னணி என்ன?" என சுமார் அரை மணி நேரம் கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தார். இந்த கேள்விகள் அனைத்திற்கும் நான் பதில் சொல்லி இருந்தாலும், அந்த அதிகாரிக்குத் திருப்தி ஏற்படவில்லை. விசா கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது அப்போது அந்தப் பக்கமாக தூதரகத்தில் பணியாற்றும் ஒரு தமிழர் தற்செயலாக வந்து என்னை அடையாளம் கண்டுகொண்டு இவர் இப்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குளர்,'காதலன்" என்ற படத்தை இயக்கியவர்" என்று அந்த அதிகாரியிடம் கூறினார்.அதற்கு அந்த அமெரிக்கப் பெண், "காதலனா? என்று சந்தேகமாக கேட்டார் அப்போது அந்த தமிழர், அந்தப் படத்தில் 'முக்காலா முக்காலா" என்ற பாடல் வருமே, அந்தப் படம் என்று கூறியுள்ளார். இதை கேட்ட அந்த பெண் அதிகாரி அந்த படத்தின் இயக்குனரா என்று ஆச்சரியமாக கேட்டு, உடனடியாக விசா நடைமுறைகளை முடித்துவிட்டு எனக்கு அமெரிக்க விசாவுக்கான அங்கீகாரத்தை கொடுத்தார் என்று ஷங்கர் கூறியுள்ளார்.

Feb 12, 2026

'மன சங்கர வர பிரசாத் காரு'.

'மன சங்கர வர பிரசாத் காரு' தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து சமீபத்தில் வெளியான படம் வெற்றி பெற்றது. அடுத்து இவரின் 158வது படத்தை பாபி கொல்லி இயக்கு கிறார்.முக்கியவேடத்தில் மோகன் லால் நடிக்க, நாயகியாக பிரியா மணி இணைந்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக இருந்த சாரா, சமீபத்தில் துரந்தர் படத்தில் நாயகியானார். தொடர்ந்து தெலுங்கிலும் நடிக்கிறார். அடுத்து சிரஞ்சீவி யின் 158வது படத்தில் அவரது மகளாக நடிக்க ,இதில் நடிக்க முதலில் கிர்த்தி ஷெட்டியிடம் பேசி வந்த நிலையில் அவர் மறுக்க இவர் இணைந்துள்ளார். . ஏஆர் ரஹ் மான் இசை.விரைவில் படப் பிடிப்பு துவங்க உள்ளது.

Feb 12, 2026

'மைலாஞ்சி' பிப்.  13ல் ரிலீஸ்.

 இளையராஜா இசையமைத்து, பாடல்கள் எழுதி உள்ளார். ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குருப் நடித்து அஜயன் பாலா இயக்கத்தில் படம். 'மைலாஞ்சி'. மலைப்பிரதேச பின்னணியில் காதல் கதையில் உருவாகி உள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்கு தயாராகி வந்த சூழலில் பிப்., 13ல் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர்.

Feb 12, 2026

தமிழ் சினிமாவில் இந்த வார ரிலீஸ் படங்கள் .

பிப்., 13ல் "கா - தி பாரஸ்ட், மை லார்ட், மைலாஞ்சி, பூக்கி, ஸ்வீட்டி நாட்டி கிரேஸி, தெரிஞ்சா காத லிங்க, சீதா பயணம்” ஆகிய புதிய படங்கள் தமிழ் சினிமாவில் ரிலீஸாகின்றன. இதன் உடன் காதலர் தினத்தை முன்னிட்டு ரீரிலீஸாகின்ற 'உயிருள்ள வரை உஷா, மௌனம் பேசியதே, மின்னலே, காதலர் தினம்' ஆகிய பழைய படங்கள்.

Feb 12, 2026

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்குகலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளருக்கு கடந்த 2022முதல் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் வருதை  தமிழ்நாடு அரசு வழங்கிவருகிறது.  2022ஆம் ஆண்டு ஆரூர்தாஸ், 2023ல் கவிஞர் மு.மேத்தா மற்றும் பி.சுசீலாஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி சிறப்பித்தார்.இந்நிலையில் கடந்த 2024ஆம் ஆண்டுக்கான விருது பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்திற்கும், 2025ஆம் ஆண்டுக்கான விருது முதுபெரும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சிறுவயதிலேயே நாடகங்களில் நடிக்க தொடங்கிய எம்.என்.ராஜம் குழந்தைநட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி ரத்தக்கண்ணீர், நாடோடி மன்னன், பாசமலர்உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதே போல் களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி இயக்குநராக தனது சினிமாவாழ்க்கையை தொடங்கிய எஸ்.பி.முத்துராமன் ரஜினி, கமலை வைத்து பலவெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அவர் முரட்டுக்காளை, தர்மத்தின் தலைவன்,குரு சிஷ்யன், சகலகலா வல்லவன், ஜப்பானில் கல்யாணராமன் உள்பட 70க்கும்மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்..

Feb 12, 2026

இரு வேடங்களில் அதர்வா நடிக்கும் 'வலை'

அதர்வா, வாணி போஜன், ரூபா மஞ்சரி நடிக்க, 9 ஆண்டுகளுக்கு பின் படம் ஜீவா சங்கர் இயக்குகிறார் 'வலை' என பெயரிட்டு, டீசர் வெளியிட்டுள்ளனர். குட்டி, சாரா இரு வேடங்களில் அதர்வா நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க,கடல், மீனவர்கள் பின்னணியில் உருவாகி உள்ளது..

Feb 05, 2026

வேள்பாரி கதையில் ரஜினியை நடிக்க வைக்க ஆசைப்படும் இயக்குனர் ஷங்கர்,

இயக்குனர் ஷங்கர்பல ஆண்டுகளாக'வேள்பாரி' நாவலை சினிமாவாக்க முயற்சித்து வருகிறார்.பட்ஜெட், நடிகர்களின் கால்ஷீட் காரணமாக தள்ளிப்போனது. தற்போது நடிகர்கள் விக்ரம், ரன்வீர் சிங்கை வைத்து படத்தை இயக்க ,மும்பை நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் ரஜினியை ஒரு கவுரவ வேடத்தில் அல்லது முக்கிய கேரக்டரில் ரஜினியைநடிக்க வைக்க ஆசைப்படும் ஷங்கர், அதற்காக ரஜினியை அடிக்கடி சந்தித்து பேசி வருகிறார். அவர் 'ஓகே' சொன்னால் விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

Feb 05, 2026

இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் 94வது வயதில்இயக்கும் 61வது படம்.

சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்,பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், லிட்டில் ஜான், ராஜ பார்வை, மைக்கேல் மதன காம ராஜன்' போன்ற படங் களை இயக்கியவர். தற்போது94 வயதை எட்டியுள்ள அவர், தனது61வது படத்தை இயக்க,தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விரைவில் பட தலைப்பை அறிவிக்கின்றனர்.

Feb 05, 2026

அட்லிஇயக்கும் படத்தில் இணையும் ஜான்வி கபூர்.

அல்லு அர்ஜூனின்22வது படத்தை அட்லிஇயக்க,தீபிகா படுகோனே, மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் நாயகிகளாக நடிக்கின்றனர். அட்லி,ஜான்வி கபூர் சம்பந்தப்பட்ட காட்சிகளை தவிர்த்து மற்ற நடிகர்களை வைத்து இயக்கி வந்தார் .ஜான்விஇம்மாதம் நடைபெற உள்ள படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

Feb 05, 2026

பிப்ரவரி.6ல் வெளியாக உள்ள படங்கள்.

2026ல் முதல் மாதமான ஜனவரியில் 22 படங்கள் ரிலீசாகின. பிப்ரவரியிலும் ரிலீசாக படங்கள் வரிசையாக உள்ளன. 'கில்லி மாப்பிள்ளை, காதல் கதை சொல்லவா, ரெட் லேபிள், வித் லவ், யோகி டா' என5 நேரடி தமிழ் படங்களும், பாவனா, ரகுமான் நடித்த 'அனோமி' என்ற மலையாள படத்தின் தமிழ் டப்பிங்கும் முதல் வாரமான பிப்.6ல் வெளியாக உள்ளன.

1 2 ... 22 23 24 25 26 27 28 ... 91 92

AD's