25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


வெள்ளித்திரை

Jan 29, 2026

பத்மஸ்ரீ விருது பெற்ற @Actor Madhavan

, சினிமாவிலிருந்து இளம் மனங்களை உரையாற்றுவது ,மற்றும் சமூக விழிப்புணர்வை வளர்ப்பது வரை, இந்த விருது அனுபவம், ஆர்வம் மற்றும் ஆழ்ந்த சிந்தனை மிக்க கண்ணோட்டத்தின் உச்சக் கட்டமாகும்.

Jan 29, 2026

1971ல் நடந்த இந்தியா பாகிஸ்தான் போரை பின்னணியாக வைத்து உருவானது 'பார்டர் 2' ரூ. 129.89 கோடி வசூலித்தது.

.சன்னி தியோல், வருண் தவான், தில்ஜித், அஹான் நடிப்பில், அனுராக் சிங் இயக்கத்தில், ஹிந்தியில் வெளியாகி உள்ள படம் 'பார்டர் 2”.1971ல் நடந்த இந்தியா பாகிஸ் தான் போரை பின்னணி யாக வைத்து உருவானது. வெள்ளியன்று ரிலீஸான இப்படம் உலகளவில் மூன்று நாட்களில் ரூ.129.89 கோடி வசூலித்துள்ளதாக படக் குழு அறிவித்துள்ளது.

Jan 22, 2026

தொடர்ந்து 10 வருஷங்களாக ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் நடிகர்களுக்காக இன்ஸுரன்ஸ் பணத்தை கட்டீட்டு வரார் நடிகர் சூர்யா.

தொடர்ந்து 10 வருஷங்களாக ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் நடிகர்களுக்காக இன்ஸுரன்ஸ் பணத்தை கட்டீட்டு வரார் நடிகர் சூர்யா சார்..! ஒவ்வொரு நடிகருக்கும் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் செலவாகும் இந்த இன்ஸுரன்ஸை முழுமையாக அவரே கட்டீட்டு வரதில்லாம, அவர்களது குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் படிப்புச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டு உதவி செய்துவருகிறார் என ஸ்டண்ட்மாஸ்டர் சில்வா அறிவித்துள்ளார்.

Jan 22, 2026

"ரூ. 400 சட்டை வாங்க கஷ்டப்பட்டேன்" பிரதீப் ரகுநாதன்.

கோமாளி,லவ் டுடே, டிராகன்,டியூட் தொடர்ந்து பிளாக் பாஸ்டர் வெற்றி படங்களை கொடுத்து ஹாட்ரிக் 100 கோடி ஹீரோவாக மாறி இருக்கும் பிரதீப் ரகுநாதன் ஆரம்ப காலத்தில் 400 ரூபாய்க்கு ஃபேக் பிராண்ட் சட்டைகளை ஸ்பென்சர் பிளாஸாவின் வாங்கி அணிவேன் என்றும் இப்போ காஸ்ட்லியா 4000 ரூபாய்க்கு சட்டை வாங்க முடிந்தாலும் அதிக பணம் செலவழிக்க மனம் வருவதில்லை என இயல்பாக பேசியுள்ளார்.

Jan 22, 2026

நாயகன் ஆன பாடலாசிரியர் பிரியன்.

சினேகன், பா.விஜய் ஆகியோரை தொடர்ந்து பாடலா சிரியர் பிரியனும் 'வெகுளி' என்ற படம் மூலம் நாய கனாக அறிமுகமா கிறார். ஒரே ஷாட் டில் எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைத்த 'அகடம்' மற்றும் 'நாகேஷ் திரையரங்கம்' படங் களை இயக்கிய இசாக் இயக்குகிறார். திவ்யா நாயர் நாயகியாக நடிக்கிறார்.

Jan 22, 2026

ரூ.200 கோடி வசூலித்த 'தி ராஜா சாப்'

மாருதி இயக்கத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன், நித்திஅகர்வால், ரித்தி குமார் நடிப்பில் ஜன., 9ல் பான் இந்தியா படமாக 'தி ராஜா சாப்' வெளியானது. கலவையான விமர்சனங்கள் வந்தபோதிலும் நான்கு நாட்களில் உலகளவில் ரூ.201 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதேபோல் சிரஞ்சீவி, நயன்தாரா நடித்து நேற்று முன்தினம் வெளியான 'மன சங்கர வர பிரசாத் காரு படம் முதல் நாளில் ரூ.112 கோடி வசூலித்துள்ளது.

Jan 22, 2026

'பராசக்தி' படத்தை வாழ்த்திய ரஜினி

சென்னையில் பராசக்தி படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் சிவகார்த்திகேயன் பேசுகையில், ''ஒரு நடிகனாக இதில் பெருமை. இந்த படம் எல்லோரையும் போய் சேரும் என்று எண்ணினோம், அது பூர்த்தியானது. "போல்டான படம், செகண்ட் ஆப் சூப்பர், பென்டாஸ்டிக் பெர்பார் மன்ஸ்" என்று ரஜினி , கமல். உள்ளிட்ட திரையுலகினர் பலரும் வாழ்த்தினர்" என்றார்

Jan 22, 2026

'அருள்வான்' அருள்நிதி, ஆரவ் நடிப்பில் 'டிமான்டி காலனி 3'படம்

'டிமான்டி காலனி 3'படம்  தற்போது அருள்நிதி நடிப்பில் உருவாகிறது. கணேஷ் விநாயகன் இயக்குகிற 'அருள்வான்' என்ற படத்தில் நடிக்க ,அவருடன் ஆரவ், ரம்யா பாண்டியனும் நடிக்கின்றனர். மலைவாழ் மக்களின் வாழ்க்கை தொடர்புடைய கதைக்களத்தில் உருவாகி, இறுதிக்கட்டத்தில்  படப்பிடிப்பு உள்ளது.

Jan 22, 2026

கென் கருணாஸ் இயக்கி விஜய் பட தலைப்பில் உருவான 'யூத்'.

முதல் முறையாக நடிகர் கருணாஸின் மகன் கென் ஒரு படத்தை இயக்கி, அதில் நடிக்கவும் செய்கிறார். ஜிவி பிரகாஷ் இசையில்.  பள்ளி பருவத்தை மையப் படுத்தி உருவாகியுள்ள ஜாலியான படம். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் 2002ல் விஜய் நடிப்பில் உருவான  'யூத்'. என தலைப்பு வைத்துள்ளனர்.

Jan 22, 2026

பிரியா பவானி சங்கர் 'மரகத நாணயம் 2'வில்...

ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில், ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் 2017ல் வெளியாகி வர வேற்பை பெற்ற படம் மரகத நாணயம்.தற்போது இதன் இரண்டாம் பாக பணிகள் துவங்கி உள்ளதை படக்குழு ஒருவீடியோ உடன் அறிவித்துள்ளனர். முதல் பாகத்தில் நடித்தவர்களுடன்  காமெடி கலந்த பேண்டஸி படமாக, கூடுதலாக இன்னொரு நாயகியாக பிரியா பவானி சங்கரும் இணைந்துள்ளார்.

1 2 ... 24 25 26 27 28 29 30 ... 91 92

AD's



More News