சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸின் 25வது படமாக ஸ்பிரிட் உருவாகிறது. திரிப்தி டிமிரி நாயகியாக நடிக்கிறார். அதிரடி ஆக்ஷன் படமாக போலீஸ் கதையில் உருவாகிறது. ஆங்கில புத்தாண்டு தினத்தில் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டனர்..
'பகவந்த் கேசரி' பட ரீமேக் உரிமையை ரூ.4 கோடிக்கு வாங்கி,விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தின் டிரைலரில் பல காட்சிகள், தெலுங்கில் நடிகர் பால கிருஷ்ணா நடித்த 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் என உறுதிப்படுத்தியுள்ளன. அந்த படத்தின் மூலக்கதையைதமிழுக்குஏற்றார்போல மாற்றி, விஜய்ரசிகர்களுக்காக, அரசியல்சீன்களுடன் 'ஜனநாயகன்' உருவாக்கியுள்ளனர். ஐனநாயகன், பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரியின் ரீமேக்கா?வெளியான கதைக்களத்தின்படி, 'ஐனநாயகன்' திரைப்படம் ‘பகவந்த் கேசரியிலிருந்து வேறுபட்டதாகத் தெரிகிறது.இது விஜய் நடிக்கும் இப்படம் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த படத்தின் ரீமேக் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ரன்வீர்சிங், அக்ஷய்கண்ணா, சஞ்சய்தத், அர்ஜுன் ,மாதவன்,சாரா உள்ளிட்டோர் நடித்த,ஆதித்யதர்இயக்கத்தில் 'துரந்தர்' படம்,31 நாளில் ரூ.1240 கோடி வசூலித்தது.32 நாளில் இந்தியாவில் மொத்த வசூலாக 968 கோடியும், அதில் நிகர வசூலாக 825.70 கோடியையும் பெற்றுள்ளது. இந்தியாவில் அதிக நிகர வசூலை பெற்ற 'புஷ்பா 2'வை (830 கோடி) விரைவில் முந்த உள்ளது 'துரந்தர் “.
நடிகர் ரஜினி சமீபத்தில் மறைந்த தயாரிப்பாளர் ஏ. வி. எம்.சரவணன் படத்திறப்பு விழாவில் பங்கேற்று, "ஏ.வி.எம்., தயாரிப்பில் நான் 11 படங்களில் நடித்தேன். ஒவ்வொரு படத்தின் வெற்றியிலும் அவரது பங்கு இருக்கும். கோடம்பாக்கத்தில் சும்மா இருந்த என் இடத்தில் ஏ. வி. எம்.சரவணன் அவரே பிளான் போட்டு கட்ட வைத்தது தான் ராகவேந்திரா மண்டபம்.சிவாஜிக்கு பின் ஆண்டுக்கு ஒரு படம் பண்ணுங்க, உடம்பு, மனசுக்கு நல்லது என்றார். அதை இப்பவும் கடைபிடிக்கிறேன்” என்றார் நடிகர் ரஜினி.
கன்னட நடிகர் உபேந்திரா, கெஸ்ட் ரோலில் ரஜினி நடித்த 'கூலி' படத்தில் நடித்தார்.. இது பற்றி இப்போது பேசிய உபேந்திரா, "படத்தில் ரஜினியின் அடியாள் போல இருந்ததாக ரசிகர்கள் ட்ரோல் செய்தார்கள். என்னை பொறுத்தவரை ரஜினியின் தீவிர ரசிகனான நான் ரஜினி படம் என்பதால் மட்டுமே “கூலி” யில் நடித்தேன்., சிறிய சீனாக இருந்தாலும் மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்வேன்” என்றார்.
விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ,ரவி கிரண் கோலா இயக்கத்தில் படத்திற்கு 'ரவுடி ஜனார்தனா' என பெயரிட்டுள்ளனர். ஆக்ஷன் கதையில்ரவுடிவேடத்தில்விஜய்தேவரகொண்டாநடித்துள்ளார். தெலுங்கு, தமிழ்உள்ளிட்ட5 மொழிகளில் வெளியாகும் இப்படத் தின் அறிமுக வீடியோ வெளி யிடப்பட்டுள்ளது. அடுத்தாண்டு படம் வெளியாகிறது.
மீனாட்சி சவுத்ரி தமிழ், தெலுங்கில் நடித்த இவர், அடுத்து பாலிவுட்டிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஹிந்தியில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ ஒரு படம் எடுக்கிறார். ஆக்ஷன் கதையில் உருவாகும் ,இதில் நாயகனாக டைகர் ஷெராப் நடிக்க ஜோடியாக மீனாட்சி நடிக்கிறார்.
'666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' என்ற படம் மூலம் மீண்டும் கன்னடத்தில் நடிக்கிறார் கன்னட சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கில் நடித்து வந்த நடிகை பிரியங்கா மோகன். ஹேமந்த் ராவ் இயக்கும் இந்த படத்தில் நாயகனாக சிவராஜ்குமார் நடிக்கிறார். பர்ஸ்ட்லுக் படத்தை படக்குழு ரெட்ரோ ஸ்டைலில் இருக்கும் பிரியங்கா மோகனின் தோற்றத்தை வெளியிட்டுள்ளது.
கிராமி விருது பெற்ற வயலின் கலைஞர் கணேஷ் ராஜ கோபாலன், 'திரி பின்னா' என்ற இந்திய சிம்பொனி இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இதை வெளியிட்டு பேசிய இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், "இன்றைய காலகட்டத்தில் ஏஐ மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம். ஆனால், கையில் வாசிக்கும் அனுபவமே சிறந்தது. அதில் தான் மனித உணர்ச்சிகளை கடத்த முடியும். பலருக்கும் உத்வேகம் தரும் இந்த வயலின் சிம்பொனி” என்றார்
2025 ல் 280க்கும் மேற்பட்ட படங்கள் தமிழில் ,எந்தாண்டும் இல்லாத அளவுக்கு வெளியாகின. 2026ம் ஆண்டு பிறக்கிறது. ஆண்டின் முதல் வாரத்திலேயே "அனலி, டியர் ரதி, ஜஸ்டிஸ் பார் ஜெனி, காக்கா, மாமகுடம், தி பெட்" ஆகிய 6 படங்கள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளன.