ரசகுல்லா (Rasgulla).
தேவையான பொருட்கள் - 1 லிட்டர் பால்,150 கிராம் சக்கரை,1 எலுமிச்சை பழம்.
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சிக் பொங்கிவரும் போது குறைவான தீயில் வைத்துக் கொள்ளவும்.
இதனுடன் எலுமிச்சை சாற்றை ஊற்றி கிளறிக் கொண்டே இருந்தால் பால் திரிந்து தண்ணீர் மற்றும் பனீர் தனியாக பிரிந்து வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.
இதனை ஒரு வெள்ளைத் துணியில் போட்டு 1 டம்ப்ளர் தண்ணீர் ஊற்றி அலசி நன்கு வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
இதனை ஒரு தட்டில் போட்டு உதிர்த்துவிட்டு8 முதல்10 எடுத்து நிமிடங்கள் பிசைந்து கொண்டால் பனீர் மிருதுவாக இருக்கும். இந்த பனீரை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் அவை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு பின் மிதமான தீயில் வைத்து கொள்ளவும் .அதனுடன் பனீர் உருண்டைகளை சேர்த்து கொள்ளவும்.
இதனை10 நிமிடங்கள் மூடி மிதமான தீயில் வைத்து வேக விடவும். இப்போது பனீர் நன்கு வெந்து பனீர் உருண்டைகள் இருமடங்காக பெரிதாக இருக்கும். இப்போது அடுப்பை அணைத்து விட்டால் ரசகுல்லா சுவைக்க தயார். இதனை ஆற வைத்து பின் பிரிட்ஜில் வைத்து குளிர்ந்த ரசகுல்லாவாகவும் பரிமாறலாம்.
0
Leave a Reply