தமிழில் விஜயின் 'ஜனநாயகன்', சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படங்கள் ரிலீஸை வைத்து வலைதளங்களில் சண்டை நடக்கும் சூழலில் பிரபாஸின் பெருந்தன்மையை ரசிகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். 2026 பொங்கலுக்கு தெலுங்கில் பிரபாஸின் 'தி ராஜா சாப்' படம் போட்டி ரிலீஸ் வெளியாகிறது. இவற்றுடன் சிரஞ்சீவி, ரவி தேஜா, சர்வானந்த் உள்ளிட்டோரின் படங்களும் ரிலீஸாகின்றன. ராஜா சாப் பட விழாவில் பேசிய பிரபாஸ், "சங்கராந்திக்கு வெளியாகும் 5 படங்களுமே வெற்றி பெறணும். அதனுடன் எனது படமும் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி. சீனியர்களிடமிருந்து தான் அனைத்தையும் கற்கிறோம். அவர்களுக்குப் பின்னால் தான் நாம்" என்றார்.
ராதிகா வயதான ரோலில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவக்குமார் இயக்கி இருக்கும் “தாய்கிழவி “படத்தில் நடித்து இருக்கிறார் .சிவகார்த்திகேயன் தற்போது படத்தின் டீசரை வெளியிட்டு இருக்கிறார் அடையாளம் தெரியாத அளவுக்கு ராதிகா மாறி இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். வேறு எந்த ஹீரோயினும் இதை செய்ததில்லை.தாய் கிழவி மேக்கப்பை ஃபோட்டோ எடுத்து கமலுக்கு அனுப்பியதும் அவர் த்ரில் ஆகிவிட்டர். வேறு எந்த ஹீரோயினும் இதை செய்தது இல்லை. நீ செய்துவிட்டாய் சூப்பர் என பாராட்டினார். அப்போது நான் டெங்குவால் பாதிக்கப்பட்டுமருத்துவமனையில் இருந்தேன். படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு ப்ரியவுக்கு ஃபோன் செய்து, 'இந்த மாதிரி ஒரு நடிகை பிறந்துதான் வரணும். “ஷீ இஸ் பெஸ்ட் ”என்றும் கூறியிருக்கிறார். அப்போது நான் வானத்தில் பறந்தேன் என்றார் நடிகை ராதிகா.
'டாடா' படத்தை இயக்கிய கணேஷ் கே பாபுவும் ,இயக்குனர்கள் நெல்சன், லோகேஷ் கனகராஜ், அட்லி, சினிஷ் உட்பட பலர் தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளார் .கவுதம் ராம் கார்த்திக் (நடிகர் கார்த்திக் மகன்) நாயகனாகவும், அஞ்சனா நேத்ரன் நாய கியாகவும் நடிக்கும் பெயரிடப்படாத படத்தை தயாரிக்கிறார். இயக்குனர் ராஜூமுருகன் உதவியாளர் தினா ராகவன் இயக்குகிறார். ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' படத்தை கணேஷ் கே பாபு, தற்போது இயக்கி வருகிறார்.
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ள படம் 'ஜனநாயகன்'. விஜய்யின் கடைசி படமாக ,வினோத் இயக்கி உள்ளார். பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்க, இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. இப்படம் 3 மணி நேரம் 6 நிமிடம் ஓட உள்ளது. டிச., 27 ல் படத்தின் இசை வெளியீடு மலேசியாவில் நடைபெற உள்ளது. நாளை படத்தின் 2வது பாடல் வெளியாகிறது.
18 தமிழ் படங்கள் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட்டன. இதில் ராமின் 'பறந்து போ' சிறந்த படமாகவும், இரண்டவதாக 'டூரிஸ்ட் பேமிலி'யும் தேர்வானது. சிறந்த நடிகராக சசிகுமார், நடிகையாக லிஜோ மோல் ஜோஸ் தேர்வானார். 'மெட்ராஸ் மேட்னி' படத்திற்கு நடுவர் குழுவின் சிறப்பு விருது வழங்கப்பட்டது
கன்னட நடிகர்கள் சிவராஜ்குமார், உபேந்திரா நடித்துள்ள படம் '45' அர்ஜூன் ஜான்யா இயக்கத்தில் தமிழ், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் ஜன.1ல் ரிலீசாகிறது. டிரைலர்வெளியீட்டு விழாவில் பேசிய சிவராஜ்குமார் "என் முதல் படம் போன்ற பயமும், பக்தியும் 129வது படமான இதிலும் எனக்கு இருந்தது. அர்ஜுன் ஜான்யா கதையை சொன்னபோது எப்படி இப்படி ஒரு கதையை உருவாக்கினார் என ஆச்சரியப்பட்டேன்" என்றார்.கன்னடத்தில் சிவராஜ்குமார், உபேந்திரா நடித்துள்ள 45 படம் தமிழிலும் வெளியாகிறது. சென்னை வந்த சிவராஜ்குமார் கூறுகையில், ''அரசியலுக்கு வந்து தான் நல்லது செய்ய வேண்டியதில்லை. நல்ல விஷயங்களை எங்கிருந்தும் பண்ணலாம். நல்லது செய்ய அதிகாரம் தேவையில்லை என்றார்.
டிச.25ல் கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதால் அன்றே படங்கள் வெளியாகின்றன. அருண்விஜயின்‘ரெட்டதல', விக்ரம் பிரபுவின் 'சிறை' மற்றும் சோனியா அகர்வாலின் 'பருத்தி' படங்கள் ரிலீஸாகின்றன. டிச.26ல் 'ரகசிய சினேகிதனே' என்ற படம் வெளியாகிறது.சுரேஷ் ராஜ குமாரி இயக்கத்தில் விக்ரம்பிரபு, எல்கே அக்ஷய் குமார், அனந்தா, அனிஷ்மா நடித்துள்ள 'சிறை' படம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள இப்படத்தின் இரண்டாவது பாடலான "மின்னு வட்டம் பூச்சி" வெளியாகி உள்ளது. ஜஸ் டின் பிரபாகர் இசையில் யுவன் ஷங்கர் ராஜா, பத்மஜா ஸ்ரீனிவா சன் பாடி உள்ளனர். கார்த்திக் நேத்தா பாடல் வரிகள் எழுதி உள்ளார்
98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிற்காக இந்தியாவில் இருந்து அரசின் சார்பில் ஒரு படம் அனுப்பி வைக்கப்படும். மதம், சாதி கடந்த புனிதமான நட்பையும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வலியையும் உணர்த்திய படம் .நீரஜ் கய்வான் இயக்கி, இஷான் கட்டர், ஜான்வி கபூர், விஷால் ஜேத்வா நடித்துள்ள 'ஹோம் பவுண்ட்' படம் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவின் கீழ் தகுதிப் பட்டியலுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளது.
விஜய் தேவரகொண்டாவின் படத்தை ராகுல் சங்கிரித்யன் இயக்குகிறார். நாயகியாக ராஷ்மிகா நடிக்க ,இதன் படப்பிடிப்பு நடந்து வரும் சூழலில் ஹாலிவுட் படமான 'தி மம்மி'யில் வில்லனாக நடித்த அர்னால்ட் வோஸ்லு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இணைந்துள்ளார்.
ஹிந்தியில் சமீபத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான 'துரந்தர்' படம் 2025ல் அதிக வசூலை குவித்த இந்திய படமாக ரூ.870.30 கோடி வசூலித்து முதலிடம் பிடித்தது. முன்னதாக ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த கன்னட படமான 'காந்தாரா சாப்டர்’ ரூ 850 கோடி பட வசூலை “துரந்தர்” முறியடித்து ரூ. 870.30 கோடி வசூலித்தது.